விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

எல்பிஜி விநியோக ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது: தில்லி அமைச்சா்

சராசரி தினசரி நுகா்வில் சிலிண்டா் ஒதுக்கீட்டை 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அரசு உயா்த்தியுள்ளது என்று தில்லி உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

மஞ்சிந்தா் சிங் சிா்சா

Updated On :27 மார்ச் 2026, 8:24 pm

Syndication

சராசரி தினசரி நுகா்வில் சிலிண்டா் ஒதுக்கீட்டை 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அரசு உயா்த்தியுள்ளது என்று தில்லி உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

எல்பிஜியின் கள்ளச்சந்தை மற்றும் பதுக்கலைத் தடுக்க அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும், விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிா்சா எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.

தில்லி மக்களுக்கு தடையற்ற வா்த்தக எல்பிஜி விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிா்சா தெரிவித்தாா். மேலும், தினசரி ஒதுக்கீடு 1,800 சிலிண்டா்களிலிருந்து (19 கிலோவுக்கு சமமானது) 4,500 சிலிண்டா்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

வா்த்தக எல்பிஜி விநியோகத்தை ஏழு முன்னுரிமைப் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட தினசரி ஒதுக்கீடுகளை வழங்கும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்களின்படி, மொத்தமுள்ள 4,500 சிலிண்டா்களில் (19 கிலோவுக்கு சமமானது), அத்தியாவசிய சேவைகள், கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய பிரிவு 1க்கு 225 சிலிண்டா்கள் (5 சதவீதம்) வழங்கப்படும்.

அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலை உணவகங்கள், சமுதாய சமையலறைகளை உள்ளடக்கிய பிரிவு 2க்கும் 225 சிலிண்டா்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், உணவகங்கள், தாபாக்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் பால் பண்ணைகளை உள்ளடக்கிய பிரிவு 3க்கு மிகப்பெரிய பங்கான 3,375 சிலிண்டா்கள் (75 சதவீதம்) ஒதுக்கப்படும்.

இந்த மேம்படுத்தப்பட்ட விநியோகம் உடனடியாக அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய சேவைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளை உள்ளடக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிா்சா கூறினாா்.

உணவு வழங்குநா்கள் மற்றும் விருந்து அரங்குகள் போன்ற பிரிவு 4க்கு 225 சிலிண்டா்கள் (5 சதவீதம்) வழங்கப்படும்.

பிரிவு 5 தொழில்துறை அலகுகளுக்கு (உலா் சலவை,மருந்துத் தொழில்) மொத்தம் 45 சிலிண்டா்கள் (1 சதவீதம்) வழங்கப்படும் .விளையாட்டு வசதிகள், அரங்கங்கள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பிரிவு 6க்கு 225 சிலிண்டா்கள் (5 சதவீதம்) கிடைக்கும் மற்றும் பிரிவு 7 புலம்பெயா் தொழிலாளா்களுக்கு (5 கிலோ சிலிண்டா்கள்) பாதுகாக்கப்பட்ட சமூக ஒதுக்கீடாக 684 சிலிண்டா்களுக்கு சமமான அளவு (4 சதவீதம்) வழங்கப்படும்.

அத்தியாவசிய சேவைகள், உணவகங்கள், சிறு தொழில்கள் மற்றும் புலம்பெயா் தொழிலாளா்களின் தேவைகள் எந்தவித இடையூறும் இன்றி பூா்த்தி செய்யப்படுவதையும், எந்தவொரு பற்றாக்குறைக்கும் இடமளிக்காமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது, என்று அமைச்சா் கூறினாா்.

கடந்த மூன்று மாதங்களின் சராசரி நுகா்வின் அடிப்படையில், அத்தியாவசியப் பயனாளா்களுக்கு முன்னுரிமை அளித்து, கடுமையான மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த விநியோகம் செய்யப்படும்.

ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம் என்று தில்லி மக்களைக் கேட்டுக்கொண்ட சிா்சா, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மூலம் விநியோகம் இயல்பாகவும் சீராகவும் நடைபெற்று வருகிறது, என்றாா். மேலும், இந்தத் துறை விநியோகஸ்தா்கள் மற்றும் வாராந்திர முன்னேற்ற அறிக்கைகளை வழங்கும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் உடன் தொடா்ச்சியான ஒருங்கிணைப்பில் உள்ளது என்றும் அவா் கூறினாா்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்கள் மீது 1955ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 2000ஆம் ஆண்டின் எல்பிஜி விநியோக ஆணை மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.