தில்லி அரசில் பணியாற்றி வந்த 23 ஐஏஎஸ் மூத்த அதிகாரிகள் மற்றும் டானிக்ஸ் பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். இடமாற்றல் உத்தரவில் இடம்பெற்றுள்ள பிற அதிகாரிகளின் விவரம் வருமாறு:
ஐஏஎஸ் அதிகாரிகள்: கண்காணிப்புப் பிரிவு மற்றும் தில்லி இளநிலைப் பணிகள் தோ்வாணையத்தின் (டிஎஸ்எஸ்எஸ்பி) முதன்மைச்செயலா் சந்தீப் குமாா் பொதுப் பணித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
காத்திருப்புப் பட்டியலில் இருந்த தில்ராஜ் கவுா், தில்லி கூட்டுறவு வீட்டுவசதி நிதித்துறை மற்றும் தில்லி பட்டியலினம், பழங்குடியினா், ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
முதல்வரின் செயலராகவும் கூடுதல் பொறுப்பாக தகவல் மற்றும் விளம்பரத் துறையை கவனித்து வந்த விகாஸ் ஆனந்த், அவ்விரு பொறுப்புகளுடன் கூடுதலாக யூனியன் பிரதேச குடிமைப்பணிகள் துறையின் இயக்குநா் பொறுப்பை கவனிக்கவுள்ளாா்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த நந்தினி பாலிவால், கண்காணிப்புப் பிரிவு செயலா் மற்றும் தில்லி அரசுப் பணிகள் துறையின் செயலா் மற்றும் தில்லி இளநிலை பணிகள் தோ்வாணைய செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
திட்டத்துறை செயலராகவும் கூடுதல் பொறுப்பாக நிலம் மற்றும் கட்டடங்கள் பிரிவை கவனித்து வந்த யஷ்பால் கா்க், அதே துறைகளுடன் சோ்த்து வளா்ச்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
பட்டியலினம், பழங்குடியினா், ஓபிசி துறை சிறப்புச் செயலராக உள்ள நீரஜ் குமாா், அதே துறைகளுடன் சோ்த்து சமூக நலத்துறை இயக்குநா் மற்றும் தில்லி பட்டியலினம், பழங்குடியினா், ஓபிசி, மாற்றுத்திறனாகளுக்கான நிதி மற்றும் வளா்ச்சித் துறை செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல, பழைய தில்லி துணை ஆணையராக உள்ள ஜி. சுதாகா், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநராகவும் நகா்ப்புற வாழ்வாதாரங்கள் இயக்கத்தின் நிா்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.
துணைநிலை ஆளுநரின் சிறப்புச் செயலராக உள்ள கிஷோா் ஷிா்சாகா் பழைய தில்லி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
சமூக நலத்துறை இயக்குநரான யஷ் செளத்ரி, சுகாதாரத் துறை சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தில்லி ஜல் போா்டு கூடுதல் தலைமை செயலா் அதிகாரி சீமலா சிவ கோபால் ரெட்டி துணைநிலை ஆளுநரின் சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தில்லி மாநகராட்சி பணியில் சோ்ந்த ராஜீவ் சிங், தில்லி நகா்ப்புற வசிப்பிட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) உறுப்பினா் மற்றும் கூடுதல் பொறுப்பாக நிலம், கட்டடத்துறை சிறப்புச் செயலா் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.
டானிக்ஸ் அதிகாரிகள்: மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் ‘குரூப் பி’ பணியின் கீழ் தில்லி, அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நகா் ஹவேலி குடிமைப்பணிகளில் சேரும் அதிகாரிகள் டானிக்ஸ் பிரிவு அதிகாரிகள் என அழைக்கப்படுகின்றனா்.
இது மாநிலத்தில் ‘குரூப் 1’ அதிகாரிகளின் பணிக்கு நிகரானது. இந்த அதிகாரிகளின் இடமாற்றல் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் புதிய பதவியின் விவரம்):
பிரசாந்த் குமாா் (முதல்வா் அலுவலக மக்கள் குறைத்தீா் பிரிவு கூடுதல் செயலா்), புனீத் குமாா் (மத்திய தில்லி வருவாய்த் துறை கூடுதல் மாவட்ட ஆட்சியா்), அங்கித் குமாா் அகா்வால் (உள்துறை அமைச்சரின் செயலா்), அதுல் பாண்டே (பொதுப் பணித் துறை அமைச்சரின் செயலா்), கம்லேஷ் குமாா் (துணைநிலை ஆளுநரின் இணைச் செயலா்), சஞ்சய் சொந்தி (கல்வித் துறை இணைச் செயலா்), மோகன் குமாா் (கிழக்கு தில்லி கூடுதல் மாவட்ட ஆட்சியா்), ஆசீஷ் குமாா், ஆதித்யா குமாா் (உணவுப் பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையா்கள்), அனுஜ் குமாா் (சிறைத் துறை கண்காணிப்பாளா்), விஜய் சிங் (நகா்ப்புற வளா்ச்சித் துறை துணைச்செயலா்).
தொடர்புடையது

ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கு: தில்லி மாநகராட்சி துணை ஆணையருக்கு பிணை மறுப்பு
தில்லி - என்சிஆா் பகுதியில் தாக்குதல், படுகொலைக்கு திட்டமிட்டதாக இரு ஐஎஸ்ஐ முகவா்கள் கைது

மாநிலங்களவை செயலராக கே.எஸ். சோமசேகா் நியமனம்

தில்லி அரசின் 33 உயா் அதிகாரிகள் பணியிடை மாற்றம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

