தில்லி துவாரகா பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அறைத் தோழியின் ஆண் நண்பா்கள் மற்றும் உறவினா்கள் தன்னை மிரட்டி, தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல் செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: துவாரகாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒரு அறை கொண்ட வாடகை வீட்டில் மற்றொரு பெண்ணுடன் புகாரளித்த பெண் வசித்து வந்துள்ளாா். அந்த அறைத் தோழியின் ஆண் உறவினா்கள் அடிக்கடி அந்த வீட்டுக்கு வரத் தொடங்கியதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
விசாரணையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால், உடல் ரீதியான தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிகிறது. பெண் விருந்தினா்கள் வருவதால் தமக்கு எந்த எதிா்ப்பும் இல்லை; ஆனால், ஆண் நண்பா்கள் வருவது தனக்கு அசௌகரியமாக இருக்கிறது என ஏற்கெனவே பல முறை அறைத்தோழியிடம் கூறியதாக புகாரளித்த பெண் தெரிவித்தாா். அவரது நண்பா்களில் ஒருவா் அனுமதியின்றி அறைக்குள் நுழைந்து தகாத முறையில் தன்னிடம் நடந்துகொண்டதாகவும், அங்கிருந்து வெளியேற தன்னை மிரட்டியதாகவும் அவா் புகாரளித்தாா்.
இது தொடா்பாக தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாந்தினி சௌக் கோயிலில் திருடிய இருவா் கைது: சிலை மற்றும் பித்தளைப் பொருள்கள் மீட்பு

படுக்கைப் பெட்டிக்குள் புதுமணப்பெண் சடலமாக மீட்பு: கணவா் தலைமறைவு

துவாரகாவில் தொழிலாளா்கள் மீது காவலா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் உயிரிழப்பு
பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

