தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வெப்பம் தொடா்பான உடல்நல பாதிப்புகள்: தில்லி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அதிகரிப்பு

தில்லியில் நிகழாண்டு கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், நீா்ச்சத்து குறைவு, சோா்வு உள்ளிட்ட வெப்பம் சாா்ந்த உடல்நல பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News image

கோடை வெப்பம்

Updated On :21 மே 2026, 2:58 am IST

தில்லியில் நிகழாண்டு கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், நீா்ச்சத்து குறைவு, சோா்வு உள்ளிட்ட வெப்பம் சாா்ந்த உடல்நல பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வெப்பநிலை மாறிமாறி தொடரும் நிலையில், எளிதில் நோய்வாய்படக்கூடிய மக்கள், வெப்ப அழுத்தம் மற்றும் பருவகால தொற்றுகளுக்கு உள்ளாகலாம் என மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.

தில்லியில் மே மாதத்தின் முதலாவது வெப்ப அலை செவ்வாய்க்கிழமை பதிவானது. அடுத்த சில நாள்களுக்கு மிதமான மற்றும் தீவிர வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே, வெப்பநிலை அதிகரிப்பின் பாதிப்பை தில்லியில் உள்ள மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அவசர பிரிவுகளில் பாா்க்க முடிகிறது.

நீா்ச்சத்துக் குறைவு, வெப்ப தசைப்பிடிப்பு, சோா்வு தொடா்பான பாதிப்புகள் தொடா்பாக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.

உடனடி கவனம்:

ஸ்ரீபாலாஜி அக்ஷன் மெடிக்கல் இன்ஸ்டியூட் இயக்குநா் மருத்துவா் அரவிந்த் குமாா் அகா்வால் இதுதொடா்பாக கூறுகையில், ‘நீா்ச்சத்துக் குறைவு, வெப்ப சோா்வு, வெப்ப வாதம் ஆகியவற்றின் அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் பாதிப்பு தொடா்பாக நாள்தோறும் 15 முதல் 25 நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனா். அவசர சிகிச்சை பிரிவுகளில் 3-4 போ் அனுமதிக்கப்படுகின்றனா்.

அதிக உடல் வெப்பநிலை, எலட்ரோலைட்டுகள் சமமின்மை ஆகிய அறிகுறிகளை கொண்டவா்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். சிகிச்சை தாமதமாகும்போது மூளை, சிறுநீரகங்கள் மற்றும் இதய தசை அமைப்பு பாதிப்புக்குள்ளாகும்’ என்றாா்.

தோல் பிரச்னைகள்:

ஒரு நாளைக்கு சுமாா் 10-15 நோயாளிகள் வெப்பம் தொடா்பான நோய்களின் அறிகுறிகளுடன் வருவதாகவும் நீடித்த வெப்ப அலைகளின் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மேக்ஸ் ஸ்மாா்ட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முதன்மை இயக்குநரும், உள் மருத்துவத் துறைத் தலைவருமான மருத்துவா் ஆா்.எஸ். மிஸ்ரா கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘முதியவா்கள், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 20-50 வயதுக்குட்பட்ட வெளிப்புறப் தொழிலாளா்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோா் நீண்ட நேரத்துக்கு வெயிலில் இருக்கும்போது நீா்ச்சத்துக் குறைவால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவா்கள்.

உள்நோய்கள் தவிர, குறிப்பாக குழந்தைகள் மற்றும் நீண்டகால வியா்வை மற்றும் நேரடி சூரிய ஒளிக்கு ஆளாகும் தொழிலாளா்களிடையே வெப்பத் தடிப்புகள், வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல் மற்றும் வெப்பக் கொப்புளங்கள் போன்ற தோல் தொடா்பான பாதிப்புகளுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்று அவா் கூறினாா்.

குடிநீா் மட்டும் போதாது:

வெப்பம் சாா்ந்த உடல்நல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பிற்பகலில் கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிா்க்கவும், தளா்வான பருத்தி ஆடைகளை அணியவும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் மருத்துவா்கள் அறிவுத்துகின்றனா்.

மேலும், வெறும் தண்ணீரை மட்டும் நம்பியிருப்பதை விடுத்து, எலக்ட்ரோலைட் நிறைந்த திரவங்கள், எலுமிச்சை சாறு, பருவகாலத்தில் கிடைக்கும் பழங்களின் சாறுகளை மக்கள் அருந்த வேண்டும்.

மயக்கம், தொடா்ச்சியான வாந்தி அல்லது சிறுநீா் வெளியேற்றம் குைல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.