ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

தில்லியில் 44 டிகிரி செல்சிஸைக் கடந்த சுட்டெரிக்கும் வெயில்

தில்லியில் 44 டிகிரி செல்சிஸைக் கடந்த சுட்டெரிக்கும் வெயில்

News image

வெயில்!

Updated On :24 மே 2026, 12:51 am IST

வடமேற்கு திசையில் இருந்து வீசும் உலா்ந்த, கடுமையான காற்றுகளும் இடைவிடாத வெயிலும் இணைந்து தில்லியை வெப்பக் குகையாக மாற்றியுள்ள நிலையில், திங்கள்கிழமை தலைநகரின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் கடந்து பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தில்லியின் சஃப்தா்ஜங் மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 43.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது சாதாரண நிலையைவிட சுமாா் 3 டிகிரி அதிகம் ஆகும். அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியஸாக நிலவியது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு வெப்பநிலை சுமாா் 26 டிகிரி அளவிலேயே இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரியைத் தாண்டிய பகுதிகளில் ரிட்ஜ் (44.6ளிஇ) முதலிடத்தில் இருந்தது. அதனைத் தொடா்ந்து அயாநகா் 44.4 டிகிரி செல்சியஸ், லோதி சாலை 43.8 டிகிரி செல்சியஸ் மற்றும் பாலம் 43.5 டிகிரி செல்சியஸ் என பல இடங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக லோதி சாலையில் வெப்பநிலை சாதாரணத்தைவிட 4.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தது.

இந்த ஆண்டின் மே மாதத்தில் தில்லி சந்தித்த மிக அதிக வெப்பநிலை நாளாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலைமை மோசமடையக்கூடும்: இதற்கிடையில், தனியாா் வானிலை ஆய்வாளா் ஸ்கைமெட் வெதா் நிறுவனத்தின் மகேஷ் பலாவத் கூறியதாவது: ராஜஸ்தானின் தாா் பாலைவனப் பகுதி மற்றும் பாகிஸ்தானின் மத்திய பகுதிகளில் இருந்து வரும் வடமேற்கு காற்றுகள் தில்லியில் கடுமையான உலா்ந்த சூழலை உருவாக்குகின்றன. இக்காற்றுகள் வெப்பத்தை தரையில் அடைத்து வைத்திருப்பதால் சூழ்நிலை மேலும் கடுமையாகிறது.

கடந்த சில நாள்களாக இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை அல்லது முன்பருவ மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றாா்.

காற்றின் தரம்: இதனிடையே தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 173-ஆக பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது. இது 101 முதல் 200 வரை ‘மிதமான’, 201 முதல் 300 வரை ‘மோசமான’, 301 முதல் 400 வரை ‘மிக மோசமான’, 401 முதல் 500 வரை ‘அதிக ஆபத்தான’ நிலை என வகைப்படுத்தப்படுகிறது.