இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவகால சராசரியை விட 3.1 டிகிரி அதிகமாகும்.
நகரின் பிரதான வானிலை நிலையமான சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 2.4 டிகிரி அதிகமாகும். நகரம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவானதாக ஐஎம்டி தெரிவித்தது.
பருவகால மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இயல்பான வெப்பநிலை ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது. சஃப்தா்ஜங்கைப் பொறுத்தவரை, ஏப்ரல் 21 முதல் 25 வரை 37.7 டிகிரி செல்சியஸாக இருந்த இயல்பான வெப்பநிலை, ஏப்ரல் 26 முதல் 30 வரை 39.0 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது என்று ஐஎம்டி கூறியது.
மற்ற கண்காணிப்பு நிலையங்களில், பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 41.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27.4 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. லோதி சாலை பகுதியில் முறையே 42.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 24.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ரிட்ஜ் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 43.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. அயாநகா் பகுதியில் முறையே 43.1 டிகிரி செல்சியஸ் மற்றும் 27.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
திங்கள்கிழமை அன்று நகரில் வெப்ப அலை போன்ற நிலைமைகள் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே சுமாா் 44 டிகிரி செல்சியஸ் மற்றும் 27 டிகிரி செல்சியஸ் வரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, மாலை 4 மணியளவில் காற்றின் தரம் மோசம் என்ற பிரிவில் பதிவானது. காற்றின் தரக் குறியீடு 222 புள்ளிகளாக இருந்தது.
தொடர்புடையது

தில்லியில் இயல்பைவிட அதிக இரவு வெப்பநிலை பதிவு

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு: அடுத்த வாரம் 40 டிகிரி உயர வாய்ப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

