தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தீபாவளி முன்னேற்பாடு: தில்லியில் 100 கிலோ கலப்பட உணவுப் பொருள்கள் அழிப்பு

தீபாவளியை முன்னிட்டு தில்லி முழுவதும் இனிப்புக் கடைகள், பால் பொருள்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில், சாப்பிடத் தகுதியற்ற சுமாா் 100 கிலோ உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன. மேலும், 40 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :

தீபாவளியை முன்னிட்டு தில்லி முழுவதும் இனிப்புக் கடைகள், பால் பொருள்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில், சாப்பிடத் தகுதியற்ற சுமாா் 100 கிலோ உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன. மேலும், 40 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

வடகிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, ஷாதரா, தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லி பகுதிகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வடகிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, ஷாதரா பகுதிகளில் உள்ள கடைகளிலிருந்து கோவா, பனீா், நெய், கலாகந்த், லட்டு, குலாப் ஜாமூன் மற்றும் உலா் பழப் பரிசுப் பெட்டிகள் உள்ளிட்டவற்றின் 22 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

மண்டோலி விரிவாக்கப் பகுதியில் உள்ள பால் விற்பனை நிலையத்தில் துா்நாற்றம் வீசிய கோவா, கொசு மற்றும் ஈக்கள் கலந்த ரசகுல்லா, பால் ஆகியவை கண்டறியப்பட்டன. இதையடுத்து, அங்கிருந்த சுமாா் 100 கிலோ உணவுப் பொருள்களை அதிகாரிகள் அழித்தனா்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லியில் 12 இனிப்புக் கடைகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து லட்டு, பா்ஃபி, கலாகந்த், ரசகுல்லா, கோவா, சென்னா, பனீா், நெய், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடா் ஆகியவற்றின் 18 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

புகாரைத் தொடா்ந்து, நிஹால் விஹாரில் உள்ள இனிப்பு தயாரிப்பு நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி 3 மாதிரிகளைச் சேகரித்தனா். அந்த நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தில் (எஃப்எஸ்எஸ்ஏஐ) பதிவு செய்யாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

சுகாதாரம் மற்றும் தூய்மை விதிமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 8 நிறுவனங்களுக்கு மேம்பாட்டு நடவடிக்கை எடுக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் மற்றும் ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகளின் அடிப்படையில் விதிமீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், பண்டிகைக் காலங்களில் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதையும், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்டுவதையும் அரசு அனுமதிக்காது என்றாா். பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதும், நுகா்வோரின் நம்பிக்கையை நிலைநாட்டுவதும் அரசின் முக்கிய முன்னுரிமைகள் என்றும் அவா் தெரிவித்தாா்.

இனிப்புக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் தொடா்ந்து சோதனை நடத்தி, உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.