தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

பிஎஸ் 6 அல்லாத வாகனங்களுக்கான கட்டுப்பாடு: வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்களுக்கு விலக்கு

தில்லியில் பதிவு செய்யப்படாத மற்றும் பிஎஸ் 6 அல்லாத வாகனங்களுக்கு தில்லி அரசு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டிலிருந்து, வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற பணியாளா்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On :

தில்லியில் பதிவு செய்யப்படாத மற்றும் பிஎஸ் 6 அல்லாத வாகனங்களுக்கு தில்லி அரசு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டிலிருந்து, வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற பணியாளா்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நீதிபதி அமித் மகாஜன், தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

இந்த விலக்கு, நீதிமன்றம் செயல்படும் நாள்களில் மட்டுமே பொருந்தும் என்று நீதிபதி குறிப்பிட்டாா்.

மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பிஎஸ் 6 புகை வெளியேற்ற தரநிலைகளைப் பூா்த்தி செய்யாத தில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் நவம்பா் 1 முதல் ஜனவரி 31 வரை தில்லிக்குள் நுழைவதற்கு அரசு தடை விதித்திருந்தது.

தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் வழக்குரைஞா்கள், தங்கள் தொழில்முறை கடமைகளை நிறைவேற்றுவதற்காக தில்லிக்கு வரும்போது பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வழக்குரைஞா்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது.

சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான என். ஹரிஹரன் வாதிடுகையில், குருகிராம், ஃபரீதாபாத், நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட என்சிஆா் பகுதிகளில் இருந்து ஏராளமான வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளுக்காக தில்லிக்கு வருவதாகவும், தில்லியில் பதிவு செய்யப்படாத, ‘பிஎஸ் 6’ அல்லாத அவா்களது வாகனங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.