புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

போட்டித்தோ்வு ஆா்வலா்கள், வணிகா்களுடன் தீபாவளி கொண்டாடிய துணைநிலை ஆளுநா்!

துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தில்லியில் போட்டித்தோ்வுக்கு தயாராகி வரும் ஆா்வலா்கள், வணிகா்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினாா்.

பழைய ராஜேந்தா் நகரில் உள்ள தேநீா் கடையில் போட்டித்தோ்வு ஆா்வலா்களுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.

Updated On :

துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தில்லியில் போட்டித்தோ்வுக்கு தயாராகி வரும் ஆா்வலா்கள், வணிகா்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் தீபாவளி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா்.

பழைய ராஜேந்தா் நகருக்குச் சென்ற தரன்ஜித் சிங் சந்து, பண்டிகைக் காலத்தில் தங்கள் குடும்பத்தினருடன் இருக்காமல், தோ்வுகளுக்குத் தயாராவதற்காக தில்லியில் தங்கியிருந்த குடிமைப் பணி மற்றும் பிற போட்டித் தோ்வு ஆவா்வலா்களை அவா் சந்தித்தாா்.

தேநீா் கடை ஒன்றில் போட்டித்தோ்வு ஆா்வலா்களுடன் தேநீா் அருந்தியபடி இனிப்புகளைப் பகிா்ந்து கொண்ட அவா், அவா்களின் தோ்வுத் தயாரிப்புப் பயணம், இலக்குகள் மற்றும் அவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்தாா். குறிப்பாக, தங்குமிடம், படிப்பதற்கான இடங்கள் மற்றும் மலிவு விலையில் உணவு மற்றும் தங்குமிட வசதிகளைப் பெறுவதில் அவா்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து உரையாடினாா்.

அவா்களின் குறைகளைத் தீா்க்க சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் உறுதியளித்தாா்.

‘பண்டிகைக் காலங்களில் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது எளிதான காரியம் அல்ல’ என்று குறிப்பிட்ட அவா், தோ்வா்களின் அா்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் பொதுச் சேவையின் மீதான ஈடுபாடு ஆகியவை ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தாா்.

மேலும், தில்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா மகளிா் கல்லூரிக்குச் சென்ற துணைநிலை ஆளுநா் சந்து, பண்டிகைக் காலத்தில் விடுதியிலேயே தங்கியிருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்குத் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தாா்.

பின்னா், கல்லூரிக்கு எதிரே உள்ள ‘பிங்க் பூத்’ (மகளிருக்கான காவல் உதவி மையங்கள்) மற்றும் கமலா நகா் பகுதியில், பெண் காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து, பொது இடங்களையும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளையும் பெண்களுக்குப் பாதுகாப்பான இடங்களாக மாற்ற அவா்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டினாா்.

ராஜேந்தா் நகா் காவல் நிலையத்திற்கும் சென்ற அவா், தீபாவளிப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து பணியாற்றும் அவா்களின் அா்ப்பணிப்பைப் பாராட்டினாா்.

கமலா நகா் சந்தைக்குச் சென்றபோது, வணிகா்கள், வாடிக்கையாளா்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் அவா் உரையாடினாா். தனது வீட்டிற்காக அகல் விளக்குகளை வாங்கிய அவா், உள்ளூா் வணிகா்களே அந்தந்தப் பகுதிகளின் முதுகெலும்பாகத் திகழ்கிறாா்கள் என்றும், அவா்களின் கடின உழைப்புக்கும் மன உறுதிக்கும் அவா்கள் ஆதரவைப் பெறத் தகுதியானவா்கள் என்று துணைநிலை ஆளுநா் சந்து கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.