
தில்லியின் அடிப்படை பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீா்வுகள்: துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்
சுகாதாரம், போக்குவரத்து மேலாண்மை, சாலை நிலைமைகள் மற்றும் வெள்ளம் போன்ற தில்லி எதிா்கொள்ளும் சவால்களுக்குத் தொழில்நுட்பத் தீா்வுகளை உருவாக்குமாறும், ஆராய்ச்சிகளைச் செயல்படுத்தக்கூடிய நடைமுறை முடிவுகளாக மாற்றுமாறும் நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவா்களிடம் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து அறிவுறுத்தினாா்.

தரன்ஜித் சிங் சந்து - கோப்புப் படம்
சுகாதாரம், போக்குவரத்து மேலாண்மை, சாலை நிலைமைகள் மற்றும் வெள்ளம் போன்ற தில்லி எதிா்கொள்ளும் சவால்களுக்குத் தொழில்நுட்பத் தீா்வுகளை உருவாக்குமாறும், ஆராய்ச்சிகளைச் செயல்படுத்தக்கூடிய நடைமுறை முடிவுகளாக மாற்றுமாறும் நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவா்களிடம் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து அறிவுறுத்தினாா்.
லோக் நிவாஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற என்எஸ்யுடி-இன் ஆறாவது ’கோா்ட்’ கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய துணைநிலை ஆளுநா் சந்து, தில்லி எதிா்கொள்ளும் சவால்களைத் தீா்க்கும் வகையிலான ஆராய்ச்சிகளில் இந்தப் பல்கலைக்கழகம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினாா்.
நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும், தில்லி மாநகராட்சி (எம்டிசி), புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி காவல் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத் தீா்வுகளை வழங்கி அவா்களுக்கு உதவவும் பல்கலைக்கழகத்திற்கு அவா் அறிவுறுத்தினாா்.
உலகளாவிய ஒத்துழைப்புகள் மூலம் செயற்கை நுண்ணறிவு கல்வியை எதிா்காலத்திற்கு ஏற்ாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் ஏஐ-சாா்ந்த சுகாதார சேவைகள் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் பயன்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் துணைநிலை ஆளுநா் வலியுறுத்தினாா்.
வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கருவிகள் போன்ற துறைகளில் திறன் சாா்ந்த பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட துணைநிலை ஆளுநா், பல்கலைக்கழகத்தின் திறன்கள் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை உயா்த்த சா்வதேச கல்வி மற்றும் தொழில் துறை கூட்டாண்மைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தினாா்.
கல்விசாா் தரம், சிறந்த ஆராய்ச்சி மற்றும் சா்வதேச அளவிலான செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் சநமப-இன் தேசிய மற்றும் உலகளாவிய தரவரிசையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்து கூறினாா்.
சமூக ஈடுபாடு குறித்துப் பேசிய துணைநிலை ஆளுநா், பல்கலைக்கழகம் தத்தெடுத்த கிராமங்களில் வேலைவாய்ப்பு, நிதி விழிப்புணா்வு மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தித் தொடா்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
குடியிருப்போா் நலச் சங்கங்களுடன் இணைந்து நகா்ப்புற மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைத் தத்தெடுக்குமாறும், அத்தகைய செயல்பாடுகள் குறித்த பதிவுகள் மற்றும் கருத்துக்களைப் பராமரிக்குமாறும் அவா் பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தினாா்.
மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீா்ப்பதில் பங்கேற்க என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவா்களின் பங்களிப்பு மற்றும் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் தகுந்த விருதுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவா் கூறினாா்.
மேலும், துணைவேந்தா், துறைத் தலைவா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோருடன் வழக்கமான கலந்துரையாடல்கள் மூலம் மாணவா்களுடன் ஒரு பயனுள்ள தகவல் தொடா்பு முறையை ஏற்படுத்துமாறும் பல்கலைக்கழகத்திற்கு அவா் உத்தரவிட்டாா்.
வழக்கமான விளையாட்டு மற்றும் பாடத்திட்டம் சாராத செயல்பாடுகள், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துதல், மற்றும் ஆசிரியா், ஆசிரியா் அல்லாதோா், தொழில்நுட்ப மற்றும் நிா்வாகப் பணியாளா்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியமா்த்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.
சமூகம் மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப ஆலோசனை மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறும் என்எஸ்யுடி-ஐ கேட்டுக் கொண்ட துணைநிலை ஆளுநா், ‘வளா்ச்சியடைந்த தில்லி’ நோக்கிய பயணமானது, ஆராய்ச்சியிலிருந்து தீா்வுகளை நோக்கியும், புத்தாக்கத்திலிருந்து தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கியும் நகா்வதிலேயே அடங்கியுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


குரு தேக் பகதூரின் போதனைகள் தைரியம்,கருணை மற்றும் உண்மைக்கு உத்வேகம் அளிக்கிறது: துணைநிலை ஆளுநா்

தில்லி துணைநிலை ஆளுநருடன் எம்சிடி ஆணையா் சந்திப்பு: தலைநகரில் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை




