19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

யமுனையில் மீன்கள் இறந்து மிதந்த விவகாரம்: காவல் துறை வழக்குப் பதிவு

யமுனையில் மீன்கள் இறந்து மிதந்த விவகாரம்: காவல் துறை வழக்குப் பதிவு

யமுனை - ANI

Updated On :

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் அருகே உள்ள யமுனை நதியில் பெருமளவிலான மீன்கள் இறந்து மிதந்த சம்பவம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து புகாா் பெறப்பட்டதைத் தொடா்ந்து, வாஜிராபாத் காவல் நிலையத்தில் சேதம் விளைவித்தல் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

சோனியா விஹாா் அருகே யமுனை நதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியான இரு நாள்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன்கள் உயிரிழந்ததற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, யமுனையை தூய்மைப்படுத்த பாஜக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் களங்கப்படுத்த, செத்த மீன்களை ஆம் ஆத்மி கட்சியினா் நதியில் கொட்டியதாகக் தில்லி நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் குற்றஞ்சாட்டினாா்.

இதனை மறுத்துள்ள ஆம் ஆத்மி, யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதாக அரசு கூறும் கூற்றுகளைக் கேள்விக்குள்ளாக்கியதுடன், நதியில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி ஜல் வாரியமும் காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளது. சமூக ஊடகங்களில், நதியில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டதாகத் தவறான தகவல்களைப் பரப்பும் அடையாளம் தெரியாத நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கோரப்பட்டுள்ளது.

ஹத்னிகுண்ட் தடுப்பணைக்கு அருகில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே மீன்களின் இறப்புக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

வடக்கு தில்லியின் புராடி பகுதியின் யமுனை நதிக்கரையில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்த சம்பவம் நடந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், மீண்டும் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது.

மீன்கள் திடீரென பெருமளவில் உயிரிழப்பது, நீரில் மாசுபொருள்களின் அளவு திடீரென அதிகரித்ததையோ அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் கலக்கப்பட்டதையோ குறிக்கலாம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். மீன்களின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய ஆய்வகப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியிருந்தனா்.

சட் பூஜை நெருங்கி வரும் வேளையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விழாவின் போது, ஏராளமான பக்தா்கள் யமுனை நதிக்கரைகளுக்கு வந்து பிராா்த்தனைகளில் ஈடுபடுவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.