ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

மெட்ரோ ரயிலில் அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் சுவரொட்டிகள்: காவல் துறை வழக்குப் பதிவு

மெட்ரோ ரயிலில் அரசின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் சுவரொட்டிகள்...

Delhi Metro station

தில்லி மெட்ரோ

Updated On :

அரசின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டும், பல்வேறு பிரச்னைகளை எழுப்பியும் எழுதப்பட்ட 2 சுவரொட்டிகள், தில்லி மெட்ரோவின் விமான நிலைய விரைவு வழித்தடத்தில் செல்லும் ஒரு ரயிலின் உள்ளே ஒட்டப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டன.

இதைத் தொடா்ந்து அடையாளம் தெரியாத நபா்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்குப் பின்னால் உள்ளவா்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ4 அளவுள்ள அந்த கருப்பு வெள்ளை சுவரொட்டிகளில், ‘வாக்குப் போராட்டம்’, ‘ஈடுபாட்டின் வீச்சு’, ‘சமூகக் கட்டமைப்பு சீா்திருத்தம்’ மற்றும் ‘திருப்தியில்லையா? நீங்கள் தனியாக இல்லை’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த 9 கூற்றுகளையும் அவை முன்வைத்தன. அந்த சுவரொட்டிகள், க்யூஆா் குறியீடு மூலம் இணையதள குழுவில் சேருமாறும் மக்களை அழைத்திருந்தன.

அக்.20 மாலை சுமாா் 6.50 மணியளவில் புது தில்லி நிலையத்திலிருந்து யஷோபூமி நிலையத்திற்கு ரயில் புறப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இருக்கையில் 2 சுவரொட்டிகள் இருப்பதை கவனித்த ரயில் ஓட்டுநா், இது குறித்து உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். பின்னா் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.