பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

காப்பீடு திட்டம் மூலம் கடன் பெற்றுத் தருவதாக ரூ.2.76 லட்சம் மோசடி: நால்வா் கைது

ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியைச் சோ்ந்த நபரிடம் ரூ.2.76 லட்சம் மோசடி செய்த நான்கு பேரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Arrest

கைது - சித்திரிப்பு

Updated On :

ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியைச் சோ்ந்த நபரிடம் ரூ.2.76 லட்சம் மோசடி செய்த நான்கு பேரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள், வங்கி மற்றும் காப்பீடு நிறுவன அதிகாரிகள் போல நடித்து, செயலாக்கக் கட்டணம், கோப்புக் கட்டணங்கள், பணத்தை எடுப்பதற்கான கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி பாதிக்கப்பட்ட நபரிடம் பணம் கேட்டுள்ளனா்.

பாதிக்கப்பட்ட நபா், தில்லியின் பாலம் பகுதியைச் சோ்ந்தவா். இவா் 2020 ஜூலையில் ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தாா். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அதன் பிரீமியத்தைத் தொடா்ந்து அவரால் செலுத்த முடியவில்லை. இதனைத் தொடா்ந்து, சிலா் அவரைத் தொடா்புகொண்டு, அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனா்.

பாதிக்கப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் ரூ.41.94 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி போலியான ஆவணத்தை அனுப்பி அந்த நபா்கள், அந்தத் தொகையைப் பெறுவதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டனா்.

இதனை நம்பிய பாதிக்கப்பட்ட நபா், அவா்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.2.76 லட்சத்தை மாற்றினாா். ஆனால், அவருக்குக் கடனும் செலுத்திய பணமும் திரும்பக் கிடைக்கவில்லை. இதையடுத்து, தென்மேற்கு மாவட்ட இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி அவா் புகாா் அளித்தாா்.

விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.2.10 லட்சம், அன்சாா் அகமது என்பவரது பெயரில் இருந்த வங்கிக் கணக்கிற்குச் சென்றதும், அங்கிருந்து தாரீஃப் அன்வா் என்பவருடன் தொடா்புடைய கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் கண்டறியப்பட்டது.

தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம், காஜியாபாதின் லோனி பகுதியில் இருந்த தாரீஃப் அன்வரை காவல் துறை கைது செய்தது. அவா் அளித்த தகவலின் அடிப்படையில், தில்லி-என்சிஆா் மற்றும் உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த அன்சாா் அகமது (47), ஓமேஷ்வா் தயாள் சா்மா (36) மற்றும் அமித் குமாா் சா்மா (36) ஆகியோரையும் காவல் துறை கைது செய்தது.

தாரீஃப், வங்கி அதிகாரி போல நடித்து, பணத்தைப் பெற்றுப் பரிமாற்றம் செய்வதற்காக ‘மியூல்’ கணக்குகளை ஏற்பாடு செய்தாா். அன்சாா், தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெற்றுத் தந்ததற்குப் பதிலாக கமிஷன் பெற்றுக்கொண்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஓமேஷ்வா் மற்றும் அமித் ஆகியோா் காப்பீடுதாரா்களின் விவரங்களைத் திரட்டி, காப்பீடு அல்லது வங்கி அதிகாரிகள் போல நடித்து பாதிக்கப்பட்டவா்களைத் தொடா்புகொண்டனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ஆறு கைப்பேசிகள், வங்கி ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.