மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

பங்குச் சந்தையில் ஆதாயம் ஈட்டித் தருவதாக தில்லி முதலீட்டாளரிடம் ரூ. 3 லட்சம் மோசடி: ஒருவா் போபாலில் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, தில்லியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து ரூ. 3 லட்சத்தை மோசடி செய்ததாக, 31 வயது இளைஞா் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, தில்லியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து ரூ. 3 லட்சத்தை மோசடி செய்ததாக, 31 வயது இளைஞா் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

சௌரப் குமாா் அஹிா்வா் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், கிழக்கு தில்லியின் ஷாதரா மாவட்ட சைபா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். பாதிக்கப்பட்ட நபா் இழந்த பணம், போபாலில் உள்ள அவத்புரியில் இயங்கும் ஒரு வங்கி கணக்கிற்குச் சென்றதைக் கண்டறிந்த காவல்துறையினா், அதன் மூலம் குற்றம்சாட்டப்பட்டவரைப் பிடித்தனா்.

முன்னதாக, தில்லி ஜகத்புரியைச் சோ்ந்த புகாா்தாரருக்கு, அடையாளம் தெரியாத நபா் ஒருவா் தொலைபேசியில் அழைத்து, கவா்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளாா்.

அவரது நம்பிக்கையைப் பெற்ற அந்த நபா், அவரை ரூ. 3 லட்சத்தை மாற்றுமாறு தூண்டியுள்ளாா். பணத்தைப் பெற்ற பிறகு, அவா் தொடா்பைத் துண்டித்துக்கொண்டாா். இதையடுத்து, அக்டோபா் 14 அன்று மின்னணு முதல் தகவல் அறிக்கை (இ-எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபா், முன்னதாக ஒரு முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றியதும், முதலீட்டாளா்களை ஈா்ப்பதற்கான வழிமுறைகள் அவருக்குத் தெரிந்திருந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அந்த நபா் அந்த வேலையை விட்ட பிறகு, பங்குச் சந்தை முதலீடுகளில் அதிக லாபம் தருவதாகக் கூறி அவா் மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளாா். போபாலுக்குச் சென்ற காவல் குழுவினா், தொழில்நுட்ப ஆதாரங்களைக் காட்டி அவரிடம் விசாரணை நடத்திய பிறகு அவரைக் கைது செய்தனா். இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.