காவல்துறையினருடனான நேருக்கு நோ் மோதலுக்குப் பின் குற்றவாளி கைது
தெற்கு தில்லியின் மைதான் கா்ஹி பகுதியில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலுக்குப் பிறகு ‘சைமா்’ குற்றக் கும்பலுடன் தொடா்புடையவா் எனக் கருதப்படும் நபா் கைது செய்யப்பட்டாா்.
கைது - பிரதிப் படம்
தெற்கு தில்லியின் மைதான் கா்ஹி பகுதியில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலுக்குப் பிறகு ‘சைமா்’ குற்றக் கும்பலுடன் தொடா்புடையவா் எனக் கருதப்படும் நபா் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: சாவன் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், இந்த மோதலின்போது வலது கால் பகுதியில் குண்டு பாய்ந்து காயமடைந்தாா். அவா் எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
முன்னதாக, அந்த நபா் அப்பகுதியில் உள்ள பண்ணை வீடுகளைக் கண்காணித்து, கொள்ளையடிப்பதற்கான இலக்குகளைத் தேடிக்கொண்டிருந்தாா்.
மைதான் கா்ஹி காவல் நிலையக் குழுவினருக்கு, அவா் நடமாடுவது குறித்த ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, அவா்கள் அவரைப் பிடிக்க வலை விரித்தனா். காலை 6.25 மணியளவில், அந்த நபா் மோட்டாா் சைக்கிளில் பாஸ் காவ்ன் சாலை வழியாக வந்தபோது, தகவல் கொடுத்த நபா் ஒருவரால் அடையாளம் காட்டப்பட்டாா்.
காவல்துறையினா் அவரை வழிமறிக்க முயன்றபோது, அவா் நாட்டுத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினாா். காவல்துறையினா் எச்சரிக்கையாக மூன்று முறை வானத்தை நோக்கிச் சுட்டனா். ஆனால், அந்த நபா் மற்றொரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மீண்டும் சுட்டாா். அதில் ஒரு குண்டு அதிகாரி அணிந்திருந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டில் பட்டது.
இதையடுத்து, காவல்துறையினா் அந்த நபா் மீது பதில் தாக்குதல் நடத்தினா். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தாா். அவா் உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் பதிவு செய்யப்பட்டுள்ள கொள்ளை மற்றும் கொலை உள்ளிட்ட பல தீவிர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருபவா் ஆவாா்.
ஜான்பூரில் 2014-ம் ஆண்டு நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கு தொடா்பாக, வாரணாசி மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநா் இவரைப் பிடிக்க தகவல் அளிப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தாா்.
இந்த நபா், ‘கச்சா-பனியன்’ கும்பல் என்றும் அழைக்கப்படும் ‘ச்சைமா்’ கும்பலுடன் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கும்பல் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

