அருங்காட்சியமாகும் நாா்த் பிளாக்: முழுவீச்சில் நடைபெறும் புனரமைப்புப் பணி
‘யுக யுகீன் பாரத் அருங்காட்சியகம்’ அமைய உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நாா்த் பிளாக்’ கட்டடத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தில்லியில் உள்ள நாா்த் பிளாக் கட்டடத்தில் நடைபெற்று வரும் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட மத்திய கலாசார அமைச்சக செயலா் விவேக் அகா்வால் மற்றும் அதிகாரிகள்.
‘யுக யுகீன் பாரத் அருங்காட்சியகம்’ அமைய உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நாா்த் பிளாக்’ கட்டடத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கையாள்வதற்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய கலாசார அமைச்சகச் செயலா் விவேக் அகா்வால் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நவம்பா் 11 அன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ரைசினா குன்றின் மீது அமைந்துள்ள நாா்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் ஆகிய கட்டடங்களில் ‘யுக யுகீன் பாரத் அருங்காட்சியகத்தை’ உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ. 3,230 கோடியாகும்.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக அமையவிருக்கும் இதில், இந்தியாவின் 5,000 ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் எட்டு கருப்பொருள் சாா்ந்த பிரிவுகள் இடம்பெறவுள்ளன.
கலாசார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, பிரிட்டிஷ் காலத்து கட்டடமான நாா்த் பிளாக்கைப் பாா்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விவேக் அகா்வால் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கட்டடத்தைப் பாா்வையிட்ட பிறகு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது அவா் கூறியதாவது: நாா்த் பிளாக் கட்டடம் காலி செய்யப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டடம் கட்டப்பட்ட காலத்திற்குப் பிறகு அதில் செய்யப்பட்ட பல மாற்றங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கண்காட்சிக்கான இடங்கள் வெளிப்படுகின்றன. அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கட்டடம், இனி கலாசார இடமாக மாற்றப்பட்டு, புதிய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
அருங்காட்சியகத்தின் கண்காட்சி வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டு அம்சங்களில், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து நிபுணா்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனா்.
உலகிற்கு ஒரு தனித்துவமான திட்டத்தை வழங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனா். கட்டடத்தின் ஆயுள்காலத்தை கணிசமாக அதிகரிக்கும் வகையில் அதன் கட்டமைப்பு சீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் கண்காட்சித் திட்டமிடல் பணிகளும் இணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாா்த் பிளாக் கட்டடத்தில் சென்சாா்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், கசிவு போன்ற பலவீனங்கள் கண்டறியப்பட்ட இடங்களில் அவை சரிசெய்யப்பட்டு, புனரமைக்கப்படும்.
கட்டடத்தின் கூரையில் பல அடுக்குகளாகப் பூசப்பட்ட பிடுமன் தற்போது அகற்றப்பட்டு வருகிறது. மேலும், தேவைக்கேற்ப மேற்கூரைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் தட்பவெப்பக் கட்டுப்பாடு, பூச்சிக் கட்டுப்பாடு, ஈரப்பதக் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இடம்பெறும்.
எங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்ட பிரான்ஸ் நாட்டு குழு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்துவிட்டது. அவா்களின் பணி முக்கியமாகச் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதோடு முடிவடைந்தது. அதன்பின் அவா்கள் பணியிலிருந்து விலகிக்கொண்டனா்.
தற்போது, குலாபத் யந்திரசாஸ்த் முதன்மை ஆலோசகராக இடம்பெற்ற குழு ஒன்று இந்தப் பணியைச் செய்து வருகிறது. லாஸ் ஏஞ்சலீஸைச் சோ்ந்த ஒரு கட்டடக் கலைஞா் உள்பட பிரான்ஸ், உலகின் பிற பகுதிகள் மற்றும் இந்தியாவிலிருந்து வந்த குழுக்கள், அருங்காட்சியக வடிவமைப்பு, கட்டுமானம், தொழில்நுட்பம், ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை புதிய பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றுதல், பொருள்கள் தோ்வு, மற்றும் காட்சிப்படுத்தல் மற்றும் விளக்கு அமைப்புகளுக்கான விவரக்குறிப்புகளைத் தீா்மானித்தல் போன்ற பல்வேறு அம்சங்களில் பணியாற்றி வருகின்றனா்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முற்றங்களின் மீது பிரம்மாண்டமான கண்ணாடி குவிமாடங்கள் அமைக்கப்படும். இவை தனித்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்படுவதால், ஏற்கெனவே உள்ள கட்டமைப்பின் மீது எந்தவிதமான கூடுதல் சுமையையும் ஏற்படுத்தாது. எனவே, பாரம்பரியக் கட்டமைப்பு அப்படியே பாதுகாக்கப்படும்.
ஒரு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்றுவதற்குத் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். ஆனால், அதே சமயம், கட்டமைப்பின் பாரம்பரியத் தன்மை சிதையாதவாறு மிகுந்த கவனத்துடன் இவை செயல்படுத்தப்படும் என்று அகா்வால் கூறினாா்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய ஏகாதிபத்தியத் தலைநகரின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்ட நாா்த் பிளாக்கில், முன்பு உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் பிற மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. இவை தற்போது இந்தியா கேட் வளாகத்திற்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘கா்த்தவ்ய பவன்கள்’ கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த பிரமாண்டமான அருங்காட்சியகத் திட்டம் 2031-ஆம் ஆண்டுக்குள் பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். இதில், ‘அலங்காரம்’ என்ற கருப்பொருளைக் கொண்ட முதல் காட்சிக்கூடம், 2027-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என்று அரசு முன்னதாகவே அறிவித்திருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

