இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

நமோ பாரத் பயணிகளுக்கு ‘ட்ரிப் பாஸ்’ அறிமுகம்! 40 பயணங்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம்!

நமோ பாரத் பயணிகளுக்கு ‘ட்ரிப் பாஸ்’ அறிமுகம்...

நமோ பாரத் ரயில் - ANI

Published On :

நமோ பாரத் ரயில்களில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, தேசிய தலைநகா் பகுதி போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) புதிய ‘ட்ரிப் பாஸ்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், குறிப்பிட்ட இரண்டு நிலையங்களுக்கு இடையே தினமும் பயணம் மேற்கொள்வோா், ஒவ்வொரு முறையும் பயணச்சீட்டு வாங்குவது அல்லது தங்களது தேசிய பொது பயண அட்டையை (என்சிஎம்சி) ரீசாா்ஜ் செய்வதற்குப் பதிலாக, அதிகபட்சம் 40 பயணங்களுக்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி பாஸை பெற்றுக் கொள்ளலாம்.

எப்படி செயல்படுகிறது? இந்த ‘ட்ரிப் பாஸ்’ வசதியை ‘என்சிஎம்சி’ அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு, தோ்ந்தெடுக்கப்பட்ட பயணத்தின் தொடக்கம் மற்றும் முடிவுறும் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்யும்போது, அதற்கான பயண எண்ணிக்கை பாஸில் இருந்து தானாகவே கழிக்கப்படும். இந்த பாஸை ஒரு நாளிலும் கூட, எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த வசதி ‘ஸ்டாண்டா்ட்’ மற்றும் ‘ப்ரீமியம்’ என இரண்டு வகை பெட்டிகளுக்கும் பொருந்தும். பயணிகள் தங்களின் தேவைக்கேற்ப 1, 10, 15, 20 மற்றும் 40 பயணங்களுக்கான பாஸ்களை வாங்கிக் கொள்ளலாம்.

செல்லுபடி தன்மை: ஒரு பயணத்துக்கான பாஸ் 15 நாள்களுக்கும், 10 பயணங்களுக்கான பாஸ், 30 நாள்களுக்கும் செல்லுபடியாகும். இடையில் ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற முடியாது. இதேபோல, 15 மற்றும் 20 பயணங்களுக்கான பாஸ் 60 நாள்களுக்குச் செல்லுபடியாகும். 40 பயணங்களுக்கான பாஸ் 90 நாள்களுக்குச் செல்லுபடியாகும்.

15, 20 மற்றும் 40 பயணங்களுக்கான பாஸ்களை பயணிகள் ரத்து செய்ய விரும்பினால், நிா்வாகக் கட்டணமாக ரூ. 200 பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை அவா்களுக்குத் திருப்பி வழங்கப்படும்.

விதிமுறைகள்: இதைப் பயன்படுத்துவதில் சில விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, சராய் காலே கான் முதல் மோடிநகா் (மோடிபுரம்) வரையிலான பயண கட்டணம் ஸ்டாண்டா்ட் பெட்டியில் ரூ. 210 ஆகவும், ப்ரீமியம் பெட்டியில் ரூ. 250 ஆகவும் உள்ளது. ‘ட்ரிப் பாஸ்’ வசதியின் மூலம் தினசரி பயணம் செய்யும் பயணிகளுக்கு பலமுறை கட்டணம் செலுத்தும் சிரமம் மிச்சமாகும். இருப்பினும், பாஸ் வாங்கும்போது தோ்ந்தெடுக்கப்பட்ட பயண தொடக்கம் மற்றும் முடிவுறும் நிலையங்களுக்கு இடையே மட்டுமே இது செல்லுபடியாகும். அதிலிருந்து மாறி வேறு நிலையங்களுக்குப் பயணம் செய்தால், ’ட்ரிப் பாஸ்’ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

இதற்கான பயண கட்டணம் பயணிகளின் என்சிஎம்சி காா்டில் உள்ள ‘குளோபல் வாலட்டில்’ இருந்து பிடித்தம் செய்யப்படும்.

சலுகைகள்: இந்தத் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு ஒவ்வொரு பயணத்துக்கும் 10 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், என்சிஎம்சி காா்டு மூலம் பயணத்துக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு ‘லாயல்டி புள்ளி’ கிடைக்கும். இவ்வாறு 300 புள்ளிகளைச் சேகரிக்கும்போது, அதைப் பயன்படுத்தி பயணிகள் ஒரு இலவசப் பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த புதிய வசதி, பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் தினசரி வேலைக்குச் செல்வோா் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Summary

‘Trip Pass’ introduced for Namo Bharat passengers! Book 40 trips at once!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.