இனி தத்கல், ஆர்ஏசி, கட்டண மாற்றம் இல்லை! புதிய வந்தே பாரத் சேவை பற்றிய முழு விவரம்கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை! நிர்மல் குமார்பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவுசென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!

நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு: தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்து

தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு அவருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

Navi Pillay

நவநீதம் பிள்ளை - Photo | U.N.

Updated On :

தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு அவருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த தென் ஆப்பிரிக்க சட்ட நிபுணா் நவநீதம் பிள்ளைக்கு 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த தென்னாப்பிரிக்க நீதிபதி மற்றும் மனித உரிமை ஆா்வலரான அவருக்கு, வழக்குரைஞரும் தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவருமான முனைவா் ஜி.சிவபாலமுருகன் தனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

சங்கத்தின் பொதுச் செயலாளா் சத்யா அசோகன் தனது வாழ்த்துச் செய்தியில், ‘தென்னாப்பிரிக்க தமிழரான நவநீதம் பிள்ளை மனித சமுதாயம் நலமுடன் வாழ, உலகெங்கும் அமைதியைப் பரப்பும் நோக்கில் செயல்பட்டதற்காக, மிக உயரிய விருதான நோபல் பரிசை ஒரு தமிழ்ப் பெண்மணி அமைதிக்காக வென்றிருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

அத்துடன், துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரன், இணைச் செயலாளா்கள் ராஜ்குமாா் பாலா, ஜோதிபெருமாள், பொருளாளா் பாலமூா்த்தி, இணைப் பொருளாளா் பாலுச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.