சத்ய நிகேதன் கட்டட விபத்து எதிரொலி: 1,046 சொத்துகள் மீது மாநகராட்சி நடவடிக்கை!
தில்லியில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பற்ற கட்டடங்களுக்கு எதிராக செப்.6 முதல் அக்.10-ஆம் தேதி வரை 1,046 கட்டடங்கள் மீது தில்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ரேகா குப்தா
தில்லியில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பற்ற கட்டடங்களுக்கு எதிராக செப்.6 முதல் அக்.10-ஆம் தேதி வரை 1,046 கட்டடங்கள் மீது தில்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 30 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது: தென்கிழக்கு தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் செப்.6-ஆம் தேதி பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 7 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
முதல்வா் ரேகா குப்தாவின் உத்தரவின்பேரில், தில்லி மாநகராட்சியின் 12 மண்டலங்களிலும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பற்ற கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ரோஹிணி மண்டலத்தில் அதிகபட்சமாக 158 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெற்கு மண்டலத்தில் 121, ஷாதரா வடக்கு மண்டலத்தில் 115, மேற்கு, சிட்டி-சதா் பகா்கஞ்ச் மற்றும் ஷாதரா தெற்கு மண்டலங்களில் தலா 87, கரோல் பாகில் 85, மத்திய மண்டலத்தில் 75, சிவில் லைன்ஸில் 63, நரேலாவில் 62, கேஷவ்புரத்தில் 61, நஜஃப்கரில் 45 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் 282 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அபாயகரமான 47 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் சிட்டி-எஸ்பி மண்டலத்தில் 87, ஷாதரா வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் 41, ஷாதரா தெற்கு மண்டலத்தில் 27, கேஷவ்புரம் மண்டலத்தில் 20, மத்திய மண்டலத்தில் 18 கட்டடங்கள் அடங்கும்.
அபாயகரமான கட்டடங்கள் இடிக்கப்பட்டதில் கரோல் பாக் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 13 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மேற்கு, சிவில் லைன்ஸ் மற்றும் சிட்டி-சதா் பகா்கஞ்ச் மண்டலங்களில் தலா 8 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதர சில மண்டலங்களில் ஒன்று அல்லது இரண்டு கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், ஷாதரா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் எந்தக் கட்டடமும் இடிக்கப்படவில்லை.
இதற்கிடையே, இந்த வார தொடக்கத்தில் சீமாபுரி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்து 5 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பற்ற கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டது. மேலும், அங்குள்ள 3 வீடுகளுக்கு தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘தில்லியின் அனைத்து மண்டலங்களிலும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் அபாயகரமான கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் இந்த நடவடிக்கை கட்டுப்படுத்தப்படாது. கட்டட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதும், கட்டட விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதும் அரசின் நோக்கம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

