தெற்கு தில்லியில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் இடிப்பு!
அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் இடிக்கப்பட்டது தொடர்பாக..

தெற்கு தில்லியின் சத்தாய்பூர் பகுதியில் உள்ள சட்பாரி கௌசாலா சாலையில் சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்பகுதியில் இருந்த சுமார் 20 வீட்டின் கட்டடங்கள் மற்றும் சில பண்ணை வீடுகள் உள்ளிட்ட பல அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கட்டடங்களை இடிப்பதற்கு புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்குத் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.
சாலை விரிவாக்கப் பணிக்காக அந்தச் சாலைப் பகுதியைச் சீரமைக்கும் நோக்கிலேயே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட நிலத்தின் அளவு மற்றும் பாதிக்கப்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







