தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

இந்திய எல்லையில் மீட்கப்பட்ட 4 உடல்கள் நேபாள நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

நேபாள வெள்ளத்தில் பலியான 4 பேரின் உடல்கள் இந்திய எல்லையில் மீட்கப்பட்டது பற்றி...

Nepal

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாள் - X

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:22 pm IST

உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நாராயணி - கண்டகி நதியில் அடையாளம் தெரியாத நான்கு உடல்கள். உடற்கூறாய்வுக்குப் பிறகு நேபாள நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 27 அன்று நாராயணி-கண்டகி நதியிலிருந்து மூன்று பெண்கள் உள்பட ஒரு ஆணின் உடல்கள் மீட்கப்பட்டன. அடையாளம் காண முடியாததால் அவை மாவட்ட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

அடையாளம் காண்பதற்காக, உடற்கூறாய்வின்போது நான்கு உடல்களிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வட்டாட்சியர் அமித் சிங் கூறுகையில்,

இந்திய எல்லையில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் இரண்டு ஆம்புலன்ஸ்களிள் மூலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் துதிபாரி அருகே உள்ள மகேஷ்பூர் எல்லையில் நேபாளத்தின் நவல்பாராசி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

கூடுதல் மாவட்ட நீதிபதி பிரசாந்த் குமார் கூறுகையில்,

நேபாள காவல்துறையிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னதாக அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வெள்ள நீரோட்டத்தின் வேகத்தால் உடல்கள் அடித்து வரப்பட்டு இந்தியப் பகுதிக்குள் வந்ததால், மகாராஜ்கஞ்ச் அதிகாரிகள் உடல்களை கைபற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோன்று, ஆகஸ்ட் 28 அன்று நேபாளத்திலிருந்து இரண்டு பெண்கள் உள்பட மூவரின் உடல்கள் மகாராஜ்கஞ்சில் உள்ள கண்டக் நதியிலிருந்து மீட்கப்பட்டன.

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியர்வர்களில் மொத்தம் ஏழு பேரி்ன் உடல்கள் இதுவரை கண்டகி நதியில் மீட்கப்பட்டுள்ளது. அவர்களில் நால்வரின் உடல்கள் உடற்கூறாய்வுக்குப் பிறகு நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மகாராஜ்கஞ்ச் மாவட்டம் நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னதாகவே உயர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நேபாளத்திலிருந்து வரும் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 903-ஆக உயர்ந்தது. தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், பேரிடரைத் தொடர்ந்து 4,247 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.