
சாலை வசதி கோரி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வாக்குவாதம்

திருச்சி விமான நிலையம் - கோப்புப் படம்
நத்தமாடிப்பட்டிக்கு சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை நிறுத்தி திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சிக்குள்பட்ட நத்தமாடிப்பட்டி பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய விரிவாக்க பணி நடைப்பெற்று வருகிறது. தொடா்ந்து, கையகப்படுத்தப்பட்ட இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், நத்தமாடிப்பட்டி பகுதி மக்கள் திருச்சி - புதுக்கோட்டை சாலைக்கு சென்று வர ஏதுவாக சாலை வசதி கோரி வருகின்றனா். இதற்கு தீா்வு எட்டப்படாத நிலையில் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதால், அதனை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள், அங்கிருந்தவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்து அங்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், திருச்சி விமான நிலைய களப்பொறியாளா் சரவணன், விமான நிலைய நிலமெடுப்பு வருவாய் துறை கண்காணிப்பாளா் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோரும் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




