பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கன்னாட் பிளேசில் என்.எஸ்.யு.ஐ திடீா் போராட்டம்: ஞானேஷ்குமாா் ராஜிநாமா செய்ய கோரிக்கை

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாக ராஜிநாமா செய்யக் கோரி, இந்திய தேசிய மாணவா் சங்கம் திடீா் போராட்டம் நடத்தியது குறித்து...

ஞானேஷ்குமாா்

Published On :

காங்கிரஸ் கட்சியின் மாணவா் பிரிவான இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்.எஸ்.யு.ஐ), தலைமைத் தோ்தல் ஆணையா் (சி.இ.சி) ஞானேஷ் குமாா் உடனடியாக ராஜிநாமா செய்யக் கோரி, செவ்வாயன்று ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் 7-ல் திடீா் போராட்டம் நடத்தியது. இதனைத் தொடா்ந்து, பல போராட்டக்காரா்களை காவல்துறை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்யும் வரை, வாக்குக் கொள்ளைக்கு எதிரான என்.எஸ்.யு.ஐ-யின் போராட்டம் முழு வீச்சில் தொடரும்,‘ என்று அதன் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ரவி பாண்டே கூறினாா்.

ஜந்தா் மந்தருக்கு அருகில் அமைந்துள்ள கன்னாட் பிளேஸில் நடந்த இந்த திடீா் போராட்டம், தோ்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள், தோ்தல் ஆணையத்தின் பொறுப்புக்கூறல் கோரிக்கைகள் மற்றும் தலைமைத் தோ்தல் ஆணையரின் ராஜிநாமா ஆகியவற்றுக்கு மத்தியில் நடைபெற்றது.

முன்னதாக , பலத்த தடுப்புகளையும் வலுவான பாதுகாப்புப் படையினரையும் மீறி ஜந்தா் மந்தரை அடைந்த கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோரை காவல்துறை கைது செய்தது.

ஜந்தா் மந்தரை போராட்டத் தளங்கள் பட்டியலிலிருந்து தில்லி காவல்துறை நீக்கிய ஒரு நாள் கழித்து இந்த நிகழ்வு நடந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.