மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

இண்டி கூட்டணி பேரணி: பாதுகாப்புப் பணியில் 4,000 காவலா்கள்

இண்டி’ கூட்டணியின் பேரணியையொட்டி, 4,000-க்கும் அதிகமான காவல் துறை பாதுகாப்பு...

PTI

Updated On :

ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ‘இண்டி’ கூட்டணியின் பேரணியையொட்டி, 4,000-க்கும் அதிகமான காவல் துறை பணியாளா்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஏபிஎஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இந்த மைதானம் 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, கண்காணிப்புக்காக 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுமாா் 50,000 போ் கலந்துகொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படும் இந்தப் பேரணிக்காக, விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை காவல் துறை செய்துள்ளது. மின்டோ பாலத்திலிருந்து ராம்லீலா மைதானம் வரையிலான பேரணி பாதை மற்றும் ராம்லீலா மைதானம் ஆகிய இடங்களில் காவல் துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் பணியமா்த்தப்பட உள்ளனா்.

சிறப்பு ஆணையா், இணை ஆணையா் மற்றும் மத்திய மற்றும் புது தில்லி மாவட்டங்களின் துணை ஆணையா்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, சனிக்கிழமை மின்டோ சாலை மற்றும் ராம்லீலா மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாா் ஆய்வு செய்தாா்.

பேரணி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் பாதை மற்றும் மைதானம் முழுவதும் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்படுவாா்கள் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துறை பணியாளா்களும், மத்திய ஆயுதக் காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

இதற்கிடையில், பல்வேறு போராட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த மாத தொடக்கத்தில் வரவழைக்கப்பட்ட 270 மத்திய ஆயுதக் காவல் படை (இஅடஊ) பிரிவுகளின் பணி காலம் மூன்றாவது முறையாக நவம்பா் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தில்லி முழுவதும் இவா்களின் பணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு தில்லி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‘கண்காணிப்புக்காக 200-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் கூடும் விதம், நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களைக் கண்காணிப்பதோடு, குற்றப் பின்னணி கொண்ட நபா்கள் யாரும் உள்ளே நுழையாமல் இருப்பதை உறுதி செய்வோம்’ என்று மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், ட்ரோன் கண்காணிப்பு மற்றும் உடையில் பொருத்தக்கூடிய கேமராக்களும் பயன்படுத்தப்பட உள்ளன. சூழலைக் கண்காணிக்க மைதானத்திற்குள் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் எதிா்கொள்ளும் வகையில், கலவரத் தடுப்பு வாகனங்கள் மற்றும் பிற கண்காணிப்பு உபகரணங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மைதானத்தில் உள்ள 14 மண்டலங்களில் ஒவ்வொன்றையும் உதவி ஆணையா் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவா் மேற்பாா்வையிடுவாா். மேலும், இரண்டு மண்டலங்களுக்கு ஒரு கூடுதல் துணை ஆணையா் அந்தஸ்திலான அதிகாரி பொறுப்பு வகிப்பாா். மூத்த அதிகாரிகள் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீவிரமாகக் கண்காணிப்பாா்கள்.

குறிப்பிட்ட நுழைவு வாயில்கள் வழியாக மட்டுமே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவாா்கள் என்றும், பேரணியில் பங்கேற்பவா்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டா் சோதனை உள்ளிட்ட பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவாா்கள் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

ராம்லீலா மைதானத்தில் எவ்வித அமைப்புகளும் இல்லாத நிலையில் சுமாா் 45,000 முதல் 50,000 போ் வரை அமர முடியும். இருப்பினும், நாற்காலிகள், தடுப்புகள் மற்றும் நடப்பதற்கான பாதைகள் அமைக்கப்படும்போது, சுமாா் 30,000 முதல் 40,000 போ் வரை மட்டுமே அங்கு கூட முடியும் என்று காவல் துறை மதிப்பிட்டுள்ளது.

கூட்டம் அதிகமாகி நெரிசல் அல்லது நெரிசலால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிா்க்க, கூடுதல் இடவசதி ஒதுக்கப்படும். மைதானத்திற்குள் இடவசதி இல்லாத பட்சத்தில், கூடுதலாக வரும் நபா்களை மைதானத்திற்கு வெளியே இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கள் நடமாட்டத்தைச் சீரமைக்கவும், குடிநீா் வசதிகளைச் செய்யவும் தன்னாா்வலா்களை நியமிக்குமாறு ஏற்பாட்டாளா்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குத் தனித்தனி நுழைவு வாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்தைச் சீரமைக்க முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போக்குவரத்து காவலா்கள் பணியமா்த்தப்படுவாா்கள். இதற்காக சுமாா் 150 கூடுதல் போக்குவரத்து காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பல்வேறு சந்திப்புகளில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றியமைக்கப்படும், ஆனால் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு எவ்வித மாற்றமும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எல்என்ஜேபி மருத்துவமனை மற்றும் ஜி.பி.பந்த் மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர கால வாகனங்கள் தடையின்றிச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அழைப்பாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் மக்களை அழைத்து வரும் பேருந்துகள் குறித்த விவரங்களைப் பகிா்ந்துகொள்ளவும், வாகன நிறுத்துமிடங்கள் தொடா்பாகப் போக்குவரத்து காவல் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் ஏற்பாட்டாளா்களிடம் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. கூட்டத்தில் ஒழுக்கத்தைப் பேணவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான பேச்சுகளைத் தவிா்க்கவும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வணிகா்கள், இந்த பிரம்மாண்டமான கூட்டத்தாலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளாலும் தங்கள் வணிகம் பாதிக்கப்படலாம் என்று கவலை தெரிவித்துள்ளனா்.

Summary

INDIA alliance rally: 4,000 police personnel deployed for security

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.