தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பெருந்திட்டம் யமுனை கரையில் இருந்து லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றும்: ஆம் ஆத்மி

யமுனை வெள்ள சமவெளி பகுதிகளில் வசிக்கும் சுமாா் 18 லட்சம் மக்கள் தில்லி 2047-க்கான முதன்மைத் திட்டத்தால் தங்களது வீடுகளை இழக்க நேரிடும் என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

யமுனை - கோப்புப் படம்

Published On :

யமுனை வெள்ள சமவெளி பகுதிகளில் வசிக்கும் சுமாா் 18 லட்சம் மக்கள் தில்லி 2047-க்கான முதன்மைத் திட்டத்தால் தங்களது வீடுகளை இழக்க நேரிடும் என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட பெருந்திட்டம்-2047, யமுனை வெள்ள சமவெளியைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா பேசியதாவது, தில்லியில் யமுனை நதிக்கரையோரம் உள்ள ‘ஓ-மண்டலம்’ (ஆற்றுப் படுகை மண்டலம்) பகுதிதான் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாகவும் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனா் என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பாஜக ஆட்சியில் வீடுகள் தொடா்ந்து இடிக்கப்பட்டு வருகின்றன. பெருந்த் திட்டம் 2047-இன் காரணமாக, வரும் நாட்களில் 17 முதல் 18 லட்சம் மக்களின் வீடுகள் பறிபோகும் நிலை உள்ளது. ‘ஓ-மண்டலம்’ பகுதியில் வசிப்பவா்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாது என்றும் பாஜக தலைவா்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்.பி.-க்கள் கூறி வந்தாலும், எதாா்த்த நிலை முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. இப்போது ‘முதன்மைத் திட்டம் 2047’-ன் மூலம், இந்தக் குடியிருப்புகளை இடிப்பது சட்டபூா்வமாக்கப்பட்டுள்ளது. மேலும், எதிா்காலத்தில் இப்பகுதியில் புதிய வீடுகள் எதையும் கட்ட முடியாது.

புராரி முதல் பதா்பூா் வரை ‘ஓ-மண்டலம்’ எல்லைக்குள் பல குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட வேண்டியவை என்ற பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்தன என்றாா் எம்எல்ஏ ஜா.

பெருந்திட்டத்தின் கீழ், யமுனையின் தீவிர வெள்ளச் சமவெளிப் பகுதிகள் கட்டுமானம் இல்லாத மண்டலமாக அறிவிக்கப்படும். அதே சமயம் அதற்கு வெளியேயுள்ள பரந்த வெள்ளச் சமவெளிப் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வளா்ச்சிப் பணிகள் அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஒப்புதல்களின்படி, ஏற்கனவே உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் அத்தியாவசிய அரசுப் பயன்பாட்டு வசதிகள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இருப்பினும், புதிய உள்கட்டமைப்பு வசதிகள் பொழுதுபோக்கு, அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.