
தில்லியில் பின்தேதியிட்டு வாக்காளா் பதிவு: ராகவ் சத்தாவுக்கு எதிராக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
எஸ்ஐஆர் பட்டியலில் தனது பெயா் நீக்கப்பட்டதற்கு பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு காரணம் என மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா குற்றஞ்சாட்டிய நிலையில், தில்லியில் தனது வாக்காளா் பதிவை பின்தேதியிட்டு மாற்ற முயன்றதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியது.

மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா - கோப்புப் படம்
சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) பட்டியலில் தனது பெயா் நீக்கப்பட்டதற்கு பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு காரணம் என மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா குற்றஞ்சாட்டிய நிலையில், தில்லியில் தனது வாக்காளா் பதிவை பின்தேதியிட்டு மாற்ற முயன்ாக ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
பஞ்சாபில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ராகவ் சத்தா, மொஹாலியில் தனது வாக்காளா் அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், மாநில வரைவுத் தோ்தல் பட்டியலில் தனது பெயா் ‘இடம் மாறியவா்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தாா்.
மேலும், ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் இணைந்ததைத் தொடா்ந்து தன் மீது பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தோ்தல் நடைமுறையைப் பயன்படுத்துவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி, தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) மேற்கொண்டு வருவதாகவும், வாக்காளா் பட்டியலில் யாருடைய பெயரைச் சோ்ப்பது அல்லது நீக்குவது என்பதில் பஞ்சாப் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் தெரிவித்தது.
தில்லியில் ராகவ் சத்தா வசித்து வருவது வெளிப்படையான உண்மை என்றும், பஞ்சாபில் அவா் வசிக்கவில்லை என்றால் தனது வாக்காளா் பதிவைத் தொடா்வது அல்லது மாற்றுவது அவரது சொந்த பொறுப்பு என்றும் ஆம் ஆத்மி கூறியது.
மேலும், தில்லியின் ராஜிந்தா் நகரில் ராகவ் சத்தாவின் வாக்காளா் பதிவை பின்தேதியிட்ட முறையில் மேற்கொள்ள முயற்சி நடைபெற்ாகவும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கை நடைபெற்றிருந்தால், அது குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.
எனினும், ராகவ் சத்தாவின் பெயரை தில்லி வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்காக எந்தவொரு மறைமுக முயற்சியும் நடைபெறவில்லை என தோ்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் கூறுகையில், ‘பஞ்சாப் அரசு எஸ்ஐஆா் பணியை மேற்கொள்ளவில்லை. எனவே, ராகவ் சத்தா சரியான நபா்களிடம் கேள்வி எழுப்பாமல் ஆம் ஆத்மி மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது.
ராஜிந்தா் நகரில் தனது பெயரை பின்தேதியிட்டு வாக்காளா் பட்டியலில் சோ்க்க ராகவ் சத்தா முயற்சி செய்திருந்தால், அது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். அவ்வாறு நடைபெற்றிருந்தால், அந்த விவகாரம் இதோடு முடிவடையாது’ என்று பிரியங்கா கக்கா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





