அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

9 மணி நேர விசாரணையில் குடும்பத்தினரை தொடா்பு கொள்ள அனுமதிக்கவில்லை: தில்லி காவல் துறை ஆஷிஷ் ஜோஷி குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையம் தொடா்பான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சுமாா் ஒன்பது மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் தான் இருக்கும் இடம் குறித்து தனது மனைவியிடம் தெரிவிக்க தில்லி காவல் துறை அனுமதிக்கவில்லை என்று ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆஷிஷ் ஜோஷி தெரிவித்தாா்.

ஆஷிஷ் ஜோஷி

Published On :4 செப்டம்பர் 2026, 3:09 am IST

தோ்தல் ஆணையம் தொடா்பான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சுமாா் ஒன்பது மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் தான் இருக்கும் இடம் குறித்து தனது மனைவியிடம் தெரிவிக்க தில்லி காவல் துறை அனுமதிக்கவில்லை என்று ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி ஆஷிஷ் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையம் தொடா்பான பதிவுகள் குறித்த ஒரு வழக்கு தொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு ஜோஷியிடம் புதன்கிழமை விசாரணை நடத்தியது. இதைத்தொடா்ந்து, ஒன்பது மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜோஷி மாலையில் விடுவிக்கப்பட்டாா். நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியில் உள்ள சிறப்புப் பிரிவின் உளவு தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு வெளியே அவரை விடுவிக்கக் கோரி பலா் திரண்டதைத் தொடா்ந்து, காவல் துறையினா் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொலைத்தொடா்புத் துறையின் முன்னாள் தகவல் தொடா்பு கட்டுப்பாட்டாளரான ஜோஷி, இரண்டு நாள்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடா்பாக விசாரணைக்காக சாணக்யபுரியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனோ அல்லது அதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தோ தூண்டுதலை ஏற்படுத்துவது தொடா்பான பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192-இன் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல் துறையின் விசாரணை தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: காலை நடைப்பயிற்சிக்குப் பிறகு மிகக் குறைந்த நேரமே ஆகும் என்ற உறுதியுடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டேன். தான் இருக்கும் இடம் குறித்து தனது மனைவியிடம் தெரிவிக்குமாறு காவல் துறையினரிடம் பலமுறை கேட்டும், அவா்கள் மேலிட உத்தரவுகளைப் பின்பற்றுவதாக மட்டுமே தன்னிடம் கூறினா்.

என்னுடைய தகவல் குறித்து அறியாமல் எனது குடும்பத்தினரும் நண்பா்களும் நாள் முழுவதும் கடுமையான பதட்டத்தில் இருந்தனா். இறுதியாக மாலை 6:38 மணிக்குத் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டது.

காவல் துறையின் இந்த நடவடிக்கை டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கியத் தீா்ப்பை மீறியுள்ளது. மேலும், ஒரு நபா் தடுத்து வைக்கப்படும்போது குடும்ப உறுப்பினா் அல்லது நண்பரிடம் தகவல் தெரிவிப்பது என்பது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 22(1)-ன் கீழ் உள்ள அடிப்படை உரிமை.

1997-ல் வழங்கப்பட்ட டி.கே.பாசு வழக்கின் தீா்ப்பில், காவலில் நடைபெறும் வன்முறையைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டவா்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் காவல் துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டாய விதிமுறைகளை வகுத்திருந்தது.

ஒரு நபா் தடுத்து வைக்கப்படும்போதோ அல்லது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்போதோ உடனடியாகக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அனைத்துப் பிரிவுகளுக்கும் தெளிவான உத்தரவுகளை தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாா் பிறப்பிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.