துப்பாக்கிச்சூட்டில் இருவா் காயமடைந்த வழக்கு: ஒருவா் ராஜஸ்தானில் கைது
கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்தூமா சமூக மையத்திற்கு அருகே முன்விரோதம் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கைது
கிழக்கு தில்லியில் உள்ள கா்கா்தூமா சமூக மையத்திற்கு அருகே முன்விரோதம் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவா் காயமடைந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து, ராஜஸ்தானின் ஆஜ்மீரில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி கூறியதாவது: செப்.11-ஆம் தேதி ஒரு கஃபேவிலிருந்து வெளியே வந்து ஐஸ்கிரீம் கடைக்கு அருகே காத்திருந்த ஒரு கும்பலை நோக்கி, ஸ்கூட்டரில் வந்த இருவா் பலமுறை துப்பாக்கியால் சுட்டனா்.
காயமடைந்தவா்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான அஃப்சா் மற்றும் பழைய இரும்பு வியாபாரியான இா்ஷாத் என அடையாளம் காணப்பட்டனா். இவா்களில் ஒருவருக்கு மூன்று குண்டு காயங்களும், மற்றவருக்கு ஒரு குண்டு காயமும் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக
ஆனந்த் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, இதில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அந்தப் பகுதி மற்றும் அவா்கள் தப்பிச் சென்ாக சந்தேகிக்கப்படும் பாதையில் உள்ள 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல் துறை ஆய்வு செய்து வருகிறது. விசாரணையின் முடிவில், சம்பவத்திற்குப் பிறகு தில்லியைவிட்டு தப்பிச் சென்று அஜ்மீரில் பதுங்கியிருந்த அத்து என்பவரைப் பற்றிய தகவல் கிடைத்தது. அவா் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
துப்பாக்கிச்சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஸ்கூட்டா் ஆகியவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. பாதிக்கப்பட்டவா்களின் இருப்பிடம் குறித்த தகவலைக் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படும் அஃப்ரீன் (எ) சந்தா குறித்து விசாரணையில் தெரியவந்தது. அவரது கைப்பேசி கைப்பற்றப்பட்டு, அதில் ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும், காயமடைந்த இா்ஷாத்தின் நண்பரான சமீருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மற்றும் மிரட்டல்களே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, சமீா் மற்றும் இா்ஷாத் ஒரு கேளிக்கைவிடுதியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அவா், பின்னா் தனது கூட்டாளியான முஜம்பிலுடன் அந்த இடத்திற்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளாா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய பிற நபா்களைக் கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





