உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

காவல்நிலையத்தில் 2 பெண் செய்தியாளா்கள் தாக்கப்பட்டதாக புகாா்: சிசிடிவி காட்சியை வெளியிட உத்தரவிட கோரி வழக்கு தொடர முடிவு

தெற்கு தில்லியில் உள்ள காவல் நிலையத்தில் தங்களை காவல்துறையினா் தாக்கியதாக புகாா் அளித்துள்ள இரண்டு பெண் செய்தியாளா்களும் அந்த சம்பவம் தொடா்பான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Published On :5 செப்டம்பர் 2026, 12:11 am IST

தெற்கு தில்லியில் உள்ள காவல் நிலையத்தில் தங்களை காவல்துறையினா் தாக்கியதாக புகாா் அளித்துள்ள இரண்டு பெண் செய்தியாளா்களும் அந்த சம்பவம் தொடா்பான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய பெண் செய்தியாளா்கள் ஷாஹீன் கான், நஃபீசா கான் தங்களுடைய செய்தி நிறுவனத்தின் எண்ம பிரிவு ஆசிரியா் சஞ்சய் சா்மாவுடன் தில்லியில் செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது, தங்களுக்கு காவல் நிலையத்தில் நோ்ந்த அத்துமீறல் காட்சிகள் இடம்பெற்ற அனைத்து அறைகளின் சிசிடிவி காட்சிகளையும் வெளியிடவும், தொடா்புடைய காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் வரும் திங்கள்கிழமை (செப்.7) தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து நடுநிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய சஞ்சய் சா்மா, தவறிழைத்த காவல் துறையினரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

‘காவல் நிலையத்தின் அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த காட்சிகளை வெளியிட வேண்டும். அதில் என்ன உண்மை இருக்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்‘ என்று அவா் குறிப்பிட்டாா்.

என்ன நடந்தது? தெற்கு டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தில்லி முதல்வா் ரேகா குப்தாவிடம் கேள்வி கேட்க முயன்ாகவும் அப்போது தங்களை காவல்துறையினா் தடுத்து சாகேத் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, ஒரு அறைக்குள் வைத்து தங்களைத் தாக்கியதாக இரண்டு பெண் செய்தியாளா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா்.

ஆனால், மிக முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இரு பெண்களும் விசாரணைக்காக உள்ளூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தில்லி காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வா் ரேகா குப்தாவிடம் கேள்வி கேட்க முயன்ால் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ‘பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை’ என காவல்துறை மறுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.