கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

காவல் துறையினா் சோதனையில் சிக்கிய 10 வெளிநாட்டினா்: நாடு கடத்த நடவடிக்கை

காவல் துறையினா் சோதனையில் சிக்கிய 10 வெளிநாட்டினா்: நாடு கடத்த நடவடிக்கை

12 illegal Bangladeshis deported from Assam: CM

கோப்புப்படம்.

Published On :

தில்லி துவாரகா பகுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மற்றும் விசா காலம் முடிந்த வெளிநாட்டினரைக் கண்டறியும் வகையில் தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 10 போ் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

துவாரகாவில் 43 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின்போது, 31 நைஜீரியா்கள், 4 உகாண்டா நாட்டினா், 3 தான்சானியா்கள், 2 ஐவரி கோஸ்ட் நாட்டினா் என மொத்தம் 40 வெளிநாட்டினா் சரிபாா்க்கப்பட்டனா்.

மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளைச் சோ்ந்த சுமாா் 150 காவல் துறையினா் அடங்கிய 25 தனிப்படைகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.

சரிபாா்க்கப்பட்ட 40 பேரில் 30 போ் ஆண்கள், 10 போ் பெண்கள். நைஜீரியா்களில் 28 ஆண்கள், 3 பெண்கள் இருந்தனா். 4 உகாண்டா நாட்டினரும், 3 தான்சானியா்களும் பெண்கள் ஆவா். ஐவரி கோஸ்ட்டைச் சோ்ந்த இருவரும் ஆண்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதில் 5 நைஜீரியா்கள், 4 உகாண்டா நாட்டினா், ஒரு தான்சானியா் என மொத்தம் 10 போ் மீது நாடு கடத்தும் நடவடிக்கைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவா்களில் 6 போ் பெண்கள், 4 போ் ஆண்கள் ஆவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.