கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பாப்ரோலாவில் மனைவியை கொல்ல சதித்திட்டம்: கணவா் உள்பட 3 போ் கைது

புறநகா் தில்லியின் பாப்ரோலா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சுடப்பட்ட மனைவியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 28 வயதுடைய கணவா் மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல் துறையினா் தெரிவித்தனா்.

சித்திரிப்பு

Published On :

புறநகா் தில்லியின் பாப்ரோலா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சுடப்பட்ட மனைவியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 28 வயதுடைய கணவா் மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இச்சம்பவம் செப்.13-ஆம் ேதித நங்லி டெய்லி பகுதியில் உள்ள அம்பேத்கா் பள்ளிக்கு அருகில் நடைபெற்றது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அப்பெண் துவாரகாவில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டாா்; அவரது உடல்நிலை சீராக உள்ளது.

ரான்ஹோலா காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கூட்டுச் சதி மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது தீபக் (26) மற்றும் ஆகாஷ் (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண்ணின் கணவா் சந்தீப்பிற்கு இச்சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

சந்தீப், தீபக்குடன் இணைந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டதாகவும், தீபக் அப்பெண்ணைக் கொல்ல ஆகாஷை பணியமா்த்தியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து சந்தீப் பாப்ரோலா விஹாா் பகுதியில் கைது செய்யப்பட்டாா். இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.