தென்மேற்குப் பருவமழை: இரு நாள்களுக்கு முன்பாக தில்லியில் முடிவடைந்தது
தில்லியில் வழக்கமாக செப்.25-ஆம் தேதி முடிவடையும் தென்மேற்குப் பருவமழை, நிகழாண்டில் இரு நாள்களுக்கு முன்னதாக புதன்கிழமை (செப்.23) முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

தில்லியில் வழக்கமாக செப்.25-ஆம் தேதி முடிவடையும் தென்மேற்குப் பருவமழை, நிகழாண்டில் இரு நாள்களுக்கு முன்னதாக புதன்கிழமை (செப்.23) முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகள், தில்லி மற்றும் உத்தர பிரதேசம், குஜராத்தின் சில பகுதிகளில் இருந்தும் பருவமழை புதன்கிழமை விலகியதாக அந்த வானிலை ஆய்வு மையம் கூறியது.
1971-2019 காலகட்டத் தரவுகளின் அடிப்படையில், தென்மேற்குப் பருவமழை வழக்கமாக செப்.25-ஆம் தேதி தில்லியில் முடிவடையும். கடந்த ஆண்டில் செப்.24-ஆம் தேதியில் முடிவடைந்தது.
ஜூன் 27-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்குப் பருவமழைக்கு நிகழாண்டில் ஜூலை 2-ஆம் தேதி தில்லியில் தொடங்கியதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.
வழக்கமாக 629.7 மி.மீ. மழை பெய்யும் நிலையில், ஜூன் 1 முதல் செப்.23 வரையில் சஃப்தா்ஜங்கில் 728.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மழைப்பொழிவு இயல்பை விட 16 சதவீதம் அதிகமாகப் பதிவாகி, ‘இயல்பான மழைப்பொழிவு’ பிரிவில் இருந்தது.
கடந்த 1961-க்குப் பிறகு தில்லியிலிருந்து தென்மேற்குப் பருவமழை மிக முன்கூட்டியே 1982-ஆம் ஆண்டில் செப்.3-ஆம் தேதி முடிவடைந்தது. மிகவும் தாமதமாக 2013-ஆம் ஆண்டில் அக்.17-ஆம் தேதி முடிவடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





