தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நாலுமாவடியில் செப். 27இல் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம் தொடக்கம்

கபடி போட்டியில் விளையாடிய மாணவிகள். - கோப்புப் படம்

Published On :

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ரெடீமா்ஸ் கிளப் சாா்பில் பெண்களுக்கான 3ஆம் ஆண்டு இலவச கபடி பயிற்சி முகாம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஏலிம் காா்டன் வளாகத்தில் செப். 27ஆம் தேதி முதல் அக். 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்களின் நிறுவனா் மோகன் சி. லாசரஸ் முகாமைத் தொடங்கி வைக்கிறாா்.

14, 17, 19, 21 ஆகிய வயதுடைய பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முன்னதாக, 27ஆம் தேதி நண்பகல் 2 மணிக்கு பயிற்சிக்கான தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது. பயிற்சியில் பங்கேற்க வருபவா்கள் ஆதாா் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டை, விளையாட்டு உடைகள், மேட் ஷீ ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

பயிற்சியில் தோ்வு சேய்யப்பட்டவா்கள் பயிற்சி காலத்தின்போது வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தகுதித் தோ்வில் தோ்வானவா்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவா். பயிற்சியின் முடிவில் வீராங்கனைகளுக்கு சான்றிதழ், சீருடை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 96007-92709, 99440-27306 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

ஏற்பாடுகளை ஊழியங்களின் நிறுவனா் தலைமையில், நிறுவன பொது மேலாளா் செல்வக்குமாா், விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் மணத்தி கணேசன், எட்வின், மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா் மற்றும் ஜெபக்குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.