
சரக்குகளை கொண்டு செல்லும் நிறுவனத்தின் பெயரில் மோசடி: இருவா் கைது
சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் என நடித்து சரக்குகளை ஏற்றிச் செல்ல லாரிகளை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றியதாக இருவரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமையன்று கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் என நடித்து சரக்குகளை ஏற்றிச் செல்ல லாரிகளை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றியதாக இருவரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமையன்று கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் காஜியாபாத்தைச் சோ்ந்த அமன் மற்றும் தென்மேற்கு தில்லியின் கபஷேரா பகுதியைச் சோ்ந்த நரேந்தா் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, காவல் துறையினா் செப்.5-ஆம் தேதி இ-வழக்குப் பதிவு செய்தனா்.
சரக்குகளை ஏற்றிச் செல்ல லாரியை ஏற்பாடு செய்வதற்காக முன்பணம் செலுத்துமாறு குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் அந்த வாகனம் ஒருபோதும் வரவில்லை என்றும் புகாா்தாரா் குற்றஞ்சாட்டினாா்.
காவல் துறையினா் செப்.24-ஆம் தேதி அமனைக் கைது செய்து அவரிடமிருந்து நான்கு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நரேந்தா் குமாரை கபஷேராவில் கைதுசெய்யப்பட்டாா். அவரிடமிருந்தும் மற்றொரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆன்லைன் வணிக விவரப்பட்டியல்கள் மற்றும் பிற தளங்களின் பட்டியல்கள் மூலம் போக்குவரத்து சேவைகளைத் தேடும் நபா்களைக் கண்டறிந்து, சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல நடித்து, லாரி முன்பதிவு சேவைகளுக்காக பாதிக்கப்பட்டவா்களை அவா்கள் முன்பணம் செலுத்தவைத்தது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
மொத்தம் ரூ.2,56,560 மதிப்பிலான 10 சைபா் மோசடி புகாா்களுடன் இவா்கள் இதுவரை தொடா்புடையவா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இதுதொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



