வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம் புதுப்பொலிவு பெறுமா?

கோவில்பட்டி, ஜூன் 7: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் மடம் போல் காட்சியளிக்கும் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்திற்கு புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீ
Updated on
1 min read

கோவில்பட்டி, ஜூன் 7: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் மடம் போல் காட்சியளிக்கும் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்திற்கு புதுப்பொலிவு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரன்அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம் கோவில்பட்டியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கட்டாலங்குளத்தில் 8-12-2004 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.

கோவில்பட்டியிலிருந்து வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம் செல்லும் சாலை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேலும், இந்த சாலையில் மின்விளக்குகள் ஏதும் இல்லை. கட்டாலங்குளத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் முழு உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மண்டபத்தின் உள்ளே சென்றால் மடம் போல் காட்சியளிக்கிறது.

நினைவு மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய உபகரணங்கள் இடம்பெற வேண்டும்.

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் படங்கள் அமைக்கப்பட்டது போன்று, கட்டாலங்குளத்திலுள்ள வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்திலும் வரலாற்றுச் செய்திகளை படங்களாக வரைந்து பார்வைக்கு வைக்க வேண்டும். அழகுமுத்துக்கோன் வழித்தோன்றலான கட்டாலங்குளத்தில் வசித்து வரும் சிவத்தசாமியிடம் வாள், திருவிளக்கு, வெண்சாமக்கொடை போன்ற அன்றைய காலத்துப் பொருள்கள் உள்ளன.

அவற்றை அவரிடமிருந்து பெற்று, மண்டபத்தினுள் காட்சிக்கு வைக்கலாம். அல்லது அவற்றின் புகைப்படங்களை அங்கு வைக்கலாம்.

நினைவு மண்டபத்தைப் பார்க்க சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில், கோவில்பட்டியிலிருந்து கட்டாலங்குளத்திற்கு சென்று, வர பஸ்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், மண்டபம் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும். மண்டபத்திற்கு மின்விளக்குகளை ஏற்படுத்தி, அழகு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலக் குழு உறுப்பினர் இளசைமணியன் கூறியதாவது: வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் அவர் நடத்திய போரை விளக்கி சித்திரங்கள் அல்லது படங்கள் இடம்பெறச் செய்யவேண்டும் என்றார் அவர்.

மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பூங்கா அமைத்து, சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்கு ஏற்ற வகையில், பஸ் வசதி மற்றும் பார்வையாளர்களுக்கு விளக்கிக் கூறும் வகையில் வழிகாட்டிகள் பணியிடத்தை உருவாக்கி,

நினைவு மண்டபத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com