புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சிதிலமடைந்த நிலையில் - கட்டபொம்மனை விசாரிக்க பயன்படுத்தப்பட்ட கட்டடம்

கோவில்பட்டி, மே 22:கயத்தாறில், கட்டபொம்மனை விசாரணை நடத்திய கட்டடம் சிதிலமடைந்துள்ளது. அதை நினைவகமாக மாற்ற வேண்டும் என அப் பகுதிதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதந்திர போராட்டத்தில், வீரபாண்டிய கட்ட

Updated On :20 செப்டம்பர் 2012, 2:30 pm

கோவில்பட்டி, மே 22:கயத்தாறில், கட்டபொம்மனை விசாரணை நடத்திய கட்டடம் சிதிலமடைந்துள்ளது. அதை நினைவகமாக மாற்ற வேண்டும் என அப் பகுதிதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர போராட்டத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பாளையக்காரர்களின் பங்கு அதிகம். பாஞ்சாலக்குறிச்சி போரின் போது, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையைவிட்டு வெளியேறினார்.

பின்பு, புதுக்கோட்டைக்கு உள்பட்ட திருக்களும்பூர் காட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

கட்டபொம்மனையும், அவருடன் தங்கியிருந்தவர்களையும் புதுக்கோட்டை மன்னர் கைது செய்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.

கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட பின்னர், 1799-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு, சிறை வைக்கப்பட்டார்.

கட்டபொம்மன் மீதான விசாரணையை பானர் மேன் அக்டோபர் 16-ம் தேதி விசாரணை நடத்தினார். விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், எதுவும் சொல்வதற்கு இல்லை. விருப்பப்படி செய்து கொள் என்று அலட்சியமாகக் கூறினாராம்.

பின்னர், கட்டபொம்மன் கயத்தாறில் சாலை ஓரத்திலிருந்து புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார். கயத்தாறில், அந்த இடத்தில் நடிகர் சிவாஜி கணேசன், கட்டபொம்மன் சிலை அமைத்து அரசிடம் ஒப்படைத்தார்.

தற்போது, அந்த இடம் கயத்தாறு பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள இடத்தை பூங்காவாக வடிவமைத்து, சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி, உயர் கோபுர மின்விளக்கு வசதியை சமீபத்தில் ஏற்படுத்தியது கயத்தாறு பேரூராட்சி.

இதுபோல, கட்டபொம்மனை விசாரிக்க பயன்படுத்தப்பட்ட கட்டடம் தற்போது கயத்தாறு காவல் நிலையம் அருகே உள்ளது. அந்த கட்டடம், மிகவும் பாழடைந்து மோசமான நிலையில் காட்சியளிக்கிறது.

அந்த கட்டடத்தை தமிழக அரசு புதுப்பித்து, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவகமாக மாற்ற வேண்டும் என்றும், அங்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் போராட்ட வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில், படங்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு, வீரபாண்டிய கட்டபொம்மனை விசாரிக்க பயன்படுத்தப்பட்ட கட்டடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.