ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அடிப்படை வசதிகளின்றி எட்டையபுரம் காவல் நிலையம்

கோவில்பட்டி, அக். 27: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி, போதிய காவலர்களை நியமிக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்

Updated On :20 செப்டம்பர் 2012, 4:59 pm

கோவில்பட்டி, அக். 27: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி, போதிய காவலர்களை நியமிக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாரதி பிறந்த ஊரான எட்டையபுரம் புறவழிச் சாலையில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸôரும், அவர்களை நாடிவரும் பொதுமக்களும் போதிய குடிநீர் வசதியின்றி தவிக்கின்றனர்.

  மேலும், புறவழிச் சாலையில் காவல் நிலையம் செயல்பட்டு வருவதால், இதன் எல்லைக்குள்பட்ட எட்டையபுரம், முத்தலாபுரம், அய்யாக்கோட்டையூர், சிங்கிலிப்பட்டி, குளத்துள்வாய்ப்பட்டி உள்ளிட்ட சுமார் 50 கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.   இங்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

  அப்போது, அவர்களுக்கு தேவையான குடிநீரோ அல்லது தேநீóர் அருந்தவோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

   மேலும், இக் காவல்நிலையத்தில் ஒரு ஆய்வாளர், ஒரு பெண் உதவி ஆய்வாளர் உள்பட 3 உதவிஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவிஆய்வாளர்கள் உள்பட 21 பேர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். இதன் கட்டுப்பாட்டுக்குள் சுமார் 50 கிராமங்கள் உள்ள நிலையில், அதிகாரிகள் உள்பட 21 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

  இநத காவல் சரகத்துக்குள்பட்ட தூத்துக்குடி - அருப்புக்கோட்டை சாலை, விளாத்திகுளம் சாலை ஆகிய பகுதிகளில் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு குடியிருப்பு வசதியும் கிடையாது. ஏற்கெனவே இருந்து வந்த கான்சாபுரம் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பு மற்றும் எட்டையபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பு கட்டடம் மிக மோசமான நிலையில், வெறும் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது.

  இங்கு பணியாற்றி வரும் காவலர்கள் பெரும்பாலானோர் உள்ளூரில் வசிக்காமல், அருகிலுள்ள ஊர்களில் வசித்து வருகின்றனர்.

    எனவே, எட்டையபுரம் காவல் நிலையத்துக்கு அதன் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களுக்கு தகுந்தவாறு போதுமான காவலர்களை நியமிப்பது மட்டுமின்றி குடியிருப்பு காலனியையும் ஏற்படுத்தி தந்தால் பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்கும்.  மேலும் காவல் நிலையத்தில் போதுமான குடிநீர் வசதியை ஏற்படுத்துவதுடன் அருகிலேயே சிற்றுண்டி விடுதி அமைக்கவும் வழி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.