கன்னியாகுமரி, ஏப்.28:பஸ் வசதி இல்லாத காரணத்தால் வட்டக்கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளுள் ஒன்று வட்டக்கோட்டை.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
18-வது நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவரது ராணுவத் தளபதியாக இருந்த யூஸ்டாசியஸ் டி லன்னாய் மேற்பார்வையில் இக்கோட்டை கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ளன.
இக்கோட்டையின் கீழ்ப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், கோட்டை மதில் சுவரை ஒட்டிய பகுதியில் பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பீரங்கி வைக்க கட்டப்பட்ட பகுதியை இன்றும் காணலாம். இதற்கு சாட்சியாக உடைந்த பீரங்கியின் பாகம் ஒன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் கிழக்குப் பக்கத்தில் கடல் அலைகள் எப்போதும் சுவரை மோதிச் செல்வதைக் காணலாம். கோட்டையின் மேல் பாகத்தில் இருந்து கடல் அழகை ரசிப்பது தனிச்சிறப்பு.முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கூட துளியளவும் சேதமடையவில்லை என்பது அக்கால கட்டுமானப் பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கோட்டையின் உள் மையப்பகுதியில் அழகிய நீச்சல்குளம் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோட்டை அமைந்துள்ளது. கோட்டைக்குள் இருந்து ஆபத்துக் காலங்களில் வீரர்கள் தப்பிச்செல்ல ஏதுவாக, நீண்ட தொலைவுக்கு சுரங்கப்பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல ஏதுவாக, பஸ் வசதியை சுற்றுலாத்துறை இன்றளவும் செய்யவில்லை.இதனால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக்கோட்டை இருப்பதே கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாத நிலை நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

