சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாலை பாதுகாப்பு வார விழா

கோவில்பட்டி, ஜன. 8:   கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா, கே.ஆர். கல்வி நிறுவனங்களில் இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.   தூத்துக்குடி வட்டா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவில்பட்டி, ஜன. 8:   கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா, கே.ஆர். கல்வி நிறுவனங்களில் இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது.

  தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேல், கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார், காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நம்பிராஜன் ஆகியோர் பேசினர்.

  கட்டுரைப் போட்டியில் மாணவர் அரவிந்த், மாணவி உமா, மாணவர் பீர்முகமது ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். பேச்சுப் போட்டியில் ஆனந்த் முதல் பரிசும், சரண்யாதேவி 2-ம் பரிசும், செல்லத்துரை 3-ம் பரிசும் பெற்றனர்.

  விழாவில், 54 ஆண்டுகளாக விபத்தின்றி மோட்டார் வாகனம் ஓட்டிய 86 வயது முதியவர் அபுபக்கருக்கு பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டது.

  முன்னதாக கல்லூரி முதல்வர் ஜீவானந்தம் வரவேற்றார். ஆட்டோ மொபைல் துறைத் தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.