டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சுயதொழில் பயிற்சி:ஜன. 16 கடைசி தேதி

திருநெல்வேலி,ஜன.8:   திருநெல்வேலி மாவட்ட நேருயுவ கேந்திரா மூலம் இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள சுயதொழில் பயிற்சிக்கு இம் மாதம் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.மதிவா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருநெல்வேலி,ஜன.8:   திருநெல்வேலி மாவட்ட நேருயுவ கேந்திரா மூலம் இளைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ள சுயதொழில் பயிற்சிக்கு இம் மாதம் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: நேருயுவ கேந்திரா மூலமாக 20 வயதுமுதல் 35 வயதுவரை உள்ள ஆண், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் புதிய பயிற்சி அளிக்க உள்ளோம். இப் பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

 இப் பயிற்சி முகாம் 30 நாள்கள் 3 பிரிவுகளாக நடத்தப்படும். முதல் 7 நாள்கள் வாழ்க்கை திறன் கல்வி, அடுத்த 7 நாள்கள் ஆளுமை, தலைமைப் பயிற்சி முகாம், அடுத்த 16 நாள்கள் தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் பயிற்சி முகாம் ஆகியவை நடைபெறும்.

 பயிற்சி நாள்களில் உணவு, தங்குமிடம் வழங்கப்படும். இதில் பயிற்சிப் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விரும்புகிறவர்கள் இம் மாதம் 16-க்குள், முழு விலாசத்துடன் கூடிய சுய தகவல்களை விண்ணப்பம் மூலம் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர், நேருயுவ கேந்திரா ஒட்டுநர் குடியிருப்பு, என்.ஜி.ஒ. அ. காலனி, திருநெல்வேலி - 7 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 மேலும் விவரங்களுக்கு 0462 - 2552803 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் மதிவாணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.