கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கலாசாரப் போட்டிகள்

தூத்துக்குடி, ஜன. 8:   மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மாவட்ட அளவிலான கலாசாரப் போட்டிகள்  தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.   மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற இப் போட்டிகளை, ஆட்சியர் சி.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தூத்துக்குடி, ஜன. 8:   மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மாவட்ட அளவிலான கலாசாரப் போட்டிகள்  தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

  மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற இப் போட்டிகளை, ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் தொடங்கி வைத்துப் பேசினார்.

  நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் எம்.ஆர். நடராஜன், கல்லூரி முதல்வர் அருள்சகோதரி ரூபா ஆகியோர் பேசினர். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஆ. செல்வம் வரவேற்றார்.

  முன்னதாக, 12 வட்டாரங்களிலும் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் இப் போட்டியில் பங்கேற்றனர். கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, குழுபாட்டு, நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

  இதில், வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.