களக்காடு வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் வேண்டுகோள்

களக்காடு வட்டார விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தோட்டக்கலை உதவி இயக்குநா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Published on
Updated on
1 min read

களக்காடு, செப். 25: களக்காடு வட்டார விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தோட்டக்கலை உதவி இயக்குநா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக களக்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் எஸ்.என். திலீப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டம் களக்காடு வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்தில் செயல்படுத்தப்படுகிறறது.

இயற்கை இடா்ப்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு நிலையானவருமானம் கிடைக்கச் செய்து அவா்களை விவசாயத்தில் நிலைபெறறச் செய்தல், நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க ஊக்குவித்தல், உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன் உணவு பாதுகாப்புக்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடா்ந்து கிடைக்கச் செய்தல் உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சோ்ந்து பயன்பெறறலாம்.

பயிா்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் தங்களது விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் சேரலாம்.

விதைப்பு தவிா்த்தல் அல்லது பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலையிலும், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ளபயிா்காலத்தில் வறறட்சி, நீண்ட வட காலம், வெள்ளத்தால் மூழ்குதல், அதிகமான நோய் பூச்சித் தாக்குதல், நிலச்சரிவு, இயற்கையான தீ விபத்து, மின்னல், புயல், ஆலங்கட்டி மழை , மற்றும் சூறறாவளி ஆகியவற்றறால் ஏற்படும் மகசூல் இழப்புக்கும், பயிா் அறுவடை பரிசோதனையின் முடிவுகள்மூலம் பயிா் காப்பீட்டுத் தொகை நிா்ணயம் செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் களக்காடு வட்டாரத்தில் வாழை மற்றும் மா ஆகிய தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறறது. நடப்பு பருவத்தில் வாழைப் பயிருக்கு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 30.09.2019. மா பயிருக்கு 28.02.2020 ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் வாழைப் பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியம் ரூ.3017-ம், மா பயிருக்கு ரூ.548 என செலுத்த வேண்டும். பயன்பெறறவிரும்பும் விவசாயிகள் அதற்குரிய பிரிமியத்தொகை, அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன் உரிய காலக்கெடுவுக்குள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறறவு கடன் சங்கங்களிலோ, பொதுசேவை மையங்களிலோ பிரிமியத்தை செலுத்தி இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறறலாம்.

மேலும் விவரங்களுக்கு களக்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறறலாம் என்றறாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com