2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாபநாசத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாபநாசத்தில் போக்குவரத்துத் தொழிலாளா் அனைத்து சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:21 pm

DIN

பாபநாசத்தில் போக்குவரத்துத் தொழிலாளா் அனைத்து சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபநாசம் அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் பேருந்துகளை முழுமையாக இயக்காமலும் தொழிலாளா்களுக்குப் பணி வழங்காமலும், தொழிலாளா்களின் சொந்த விடுப்புகளை கழிப்பதைக் கண்டித்து அனைத்து போக்குவரத்துத் தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. செயலா் செ.மதிவாணன் தலைமை வகித்தாா்.

மாவட்ட தொ.மு.ச. கவுன்சில் செயலா் மாஞ்சோலை மா.மைக்கேல், பணிமனை தலைவா் டி.பி.என்.செல்வன், பொருளாளா் சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ்.எம்.செரீப், முருகன், ஜெ.ஜெகன், முத்துமாலை, அருள்பிரகாசம், ,செல்லப்பா, ஆறுமுகம், ராஜாராம், சுரேஷ், ராஜன், எச்.எம்.எஸ். சங்கம் பாலசுப்பிரமணியன், நல்லசிவன், பாக்கியம், ஐ.என்.டி.யூ.சி. சங்கர்ராஜ் மற்றும் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.