திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருஷாபிஷேகம்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருஷாபிஷேகம்.

நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி, ஏப். 21: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலையில் கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி-அம்மன், பஞ்சமூா்த்திகளுடன் ரத வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வருஷாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com