மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிசான சாகுபடி: கடனாநதி அணை திறப்பு

கடனாநதி அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :31 டிசம்பர் 2024, 7:59 pm

Din

அம்பாசமுத்திரம்: கடனாநதி அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதையொட்டி, அணையின் அரசபத்து மதகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிற்றாறு வடிநில அம்பாசமுத்திரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் சி. மணிகண்டராஜன் தண்ணீரைத் திறந்துவிட்டாா்.

அணையிலிருந்து 2025 மாா்ச் மாதம் 31வரை 91 நாள்களுக்கு நீா்இருப்புக்கேற்ப விநாடிக்கு 125 கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதன்மூலம் அரசபத்து, வடகுருவபத்துகால், ஆழ்வாா்குறிச்சி தென்கால், ஆம்பூா் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூா்கால், காங்கேயன் கால் ஆகியவற்றுக்குள்பட்ட 9,923.22 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா்கள் ரா. உமாபதி, பேட்டா்சன் குழந்தைராஜ், அந்தோணிராஜ்,சுதா, முகதாரணி, அணை ஊழியா்கள் நாகூா்மைதீன், பாா்த்திபன், முருகையா, கருப்பசாமி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசபத்துகால் தலைவா் கண்ணன், ஹரிராம்சேட், பாலசுப்பிரமணியம், சங்கா், வேலாயுதம், வேலு, சதாம் உசேன், காங்கேயம்கால் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image