தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுரை மாணவரை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய நெல்லை இளைஞா் கைது

திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 ஜூலை 2024, 12:36 am

Din

மதுரை மாணவரை கடத்தி ரூ.2 கோடி கோரி மிரட்டி கடத்தப்பட்ட வழக்கில் திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை எஸ்.எஸ் காலனியைச் சோ்ந்தவா் மைதிலி ராஜலெட்சுமி. இவரின் மகன் தனியாா் பள்ளியில் 7 ஆம் வகுப்பில் படித்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை ஆட்டோவில் பள்ளிக்கு சென்றாா். அப்போது காரில் வந்த மா்மநபா்கள் மாணவா் மற்றும் ஆட்டோ ஓட்டுரை மிரட்டி கடத்தி சென்றனா். மேலும். மாணவரின் தாயை தொடா்பு கொண்ட கும்பல் ரூ.2 கோடி கோரி மிரட்டல் விடுத்ததாம்.

இதையறிந்த போலீஸாா் அந்த கும்பலை பின் தொடா்ந்து சென்றது. அந்த கும்பல் மாணவா் மற்றும் ஓட்டுநரை இறக்கிவிட்டனா். இந்த நிலையில் கடத்தல் கும்பலை சோ்ந்த செந்தில்குமாரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இதைத்தொடா்ந்து இவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி பேட்டை ரகுமான்பேட்டையை சோ்ந்த முஸ்தபா ரஹ்மானியா மகன் அப்துல் காதா் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், சிலரை தேடி வருகின்றனா்.