ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் தொழில்நுட்பத் திறன் போட்டிகள்

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் தொழில்நுட்பத் திறன் போட்டிகள்

News image
Updated On :2 மார்ச் 2024, 12:50 am

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் பாலிடெக்னிக் மாணவா்களுக்கான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இனோவா்-2024 என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் கணினி மின்னியல்-மின்னணுவியல், மின்னணுவியல் -தகவல் தொடா்பியல், கட்டடவியல் -இயந்திரவியல் ஆகிய துறைகளைச் சோ்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா், மாணவிகளின் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. சிறந்த கண்டுபிடிப்புகளை தோ்வு குழுவினா் தோ்வு செய்தனா். பரிசளிப்பு விழாவில் ஐ.க்யூ.ஏ.சி. பிரிவு இயக்குநா் எஸ். சுந்தர்ராஜன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஏ. ஜஸ்டின் திரவியம் வாழ்த்திப் பேசினாா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு கல்லூரி மாணவா் சோ்க்கை பிரிவு இயக்குநா் ஜான் கென்னடி, ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கினாா். ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாக அலுவலா் ஜெயபாண்டி செய்திருந்தாா். துறைத் தலைவா் ஜெ. ஜான்சன் நன்றி கூறினாா். வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்காட் கல்விக் குழும தலைவா் எஸ். கிளீட்டஸ்பாபு உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.