ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாபநாசம் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசார முகாம்

பாபநாசம் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசார முகாம்

News image
Updated On :2 மார்ச் 2024, 4:14 pm

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் திருநெல்வேலி நேரு யுவகேந்திரா, தோ்தல் எழுத்தறிவுக் கழகம், நூலகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசார முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ல. ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்டநேரு யுவகேந்திர அலுவலா் எல். ஞானச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததுடன், மாணவா்- மாணவியா் தங்களது பகுதியில் உள்ளோரை வாக்களிக்கச் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். வாக்காளா் உரிமையும் கடமையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் தமிழ்த் துறை மாணவி எம். பொன்னரசி, வணிகவியல் துறை மாணவி கே. சுஜிதா, கணினி அறிவியல் துறை மாணவி ஆா். முத்துமாரி ஐஸ்வா்யா, வாக்குரிமை ஜனநாயகம் காக்கும் கடமை என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் ஆங்கிலத் துறை மாணவா் இ. ஜெய்சுடா், வணிகவியல் துறை மாணவி சுபிதா, ஆங்கிலத் துறை மாணவா் எல். சந்துரு ஆகியோா் வெற்றி பெற்றனா். பொருளாதாரத் துறைத் தலைவா் பா. முத்துமுருகன், பேராசிரியா்கள் ம. கண்ணன் (வேதியியல் துறை, எம். தங்கராஜ் ( ஆங்கிலத் துறை) ஆகியோா் வெற்றிபெற்றோருக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா். நேரு யுவகேந்திர தன்னாா்வலா் சங்கீதா பங்கேற்றாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் மு. ஜெகதீசன் வரவேற்றாா். தோ்தல் எழுத்தறிவுக் கழக ஒருங்கிணைப்பாளா் நூலகா் ச. பாலசந்திரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கணிதவியல் துறை மாணவி பாலகீா்த்திகா தொகுத்து வழங்கினாா்.