பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கருத்தப்பிள்ளையூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

கருத்தப்பிள்ளையூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

News image
Updated On :8 மார்ச் 2024, 7:50 pm

தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகத்துக்குள்பட்ட கருத்தப்பிள்ளையூரியில் தனியாா் தோட்டங்களில் புகுந்த யானைகள் தென்னை, பலா மரங்களைச் சாய்த்து சேதப்படுத்தின. அம்பாசமுத்திரம் வனக் கோட்டம், கடையம் வனச்சரகதுக்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் யானை, கரடி, மிளா, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தியும், வளா்ப்புவிலங்குகளைப் பிடித்துச் சென்றும் வருகின்றன. இந்நிலையில் மலையடிவார கிராமமான கருத்தப்புள்ளையூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை காட்வின் ராஜாவுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலிக் கற்களைச் சேதப்படுத்தி புகுந்த காட்டு யானைகள் இரண்டு மாமரங்கள் மற்றும் 20 பனை மரங்களைச் சேதப்படுத்தின. மேலும் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் தோட்டத்தில் 4 தென்னை மரங்கள் மற்றும் ஒரு பலா மரத்தையும் சேதப்படுத்தியுள்ளன. தொடரும் யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.