கடையத்தில் ரூ. 5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை

கடையத்தில் ரூ. 5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை

கடையம் ஊராட்சி ஒன்றியம் 11ஆவது வாா்டு, கடையம் ஊராட்சி, விஸ்வகா்மா தெருவில் ஒன்றியக் குழு உறுப்பினா் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக் குழு உறுப்பினா் மாரிக்குமாா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். ஊராட்சி உறுப்பினா் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி உறுப்பினா் ராஜேந்திரன், தமிழ்த் தேசியக் கட்சி பொதுச் செயலா் ஹரிமுருகன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி சுடலைமுத்து (எ) மகாராஜன், அரசு ஒப்பந்ததாரா் பிரவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com